பாகுபலி 2 - விமர்சனம்
8/5/2015 12:22:35 PM
நடிப்பு: பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர்.
ஒளிப்பதிவு: கே.கே.செந்தில்குமார்
இசை: மரகதமணி
தயாரிப்பு: அர்கா மீடியா ஒர்க்ஸ்
இயக்கம்: எஸ்.எஸ்.ராஜமவுலி
முதல் பாகத்தில், ‘பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்?’ என்ற கேள்விக்கான
பதிலையும், கொடூரன் பல்வாள்தேவன் ஆட்சிக்கு அமரேந்தி
முதல் பாகத்தில், ‘பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்?’ என்ற கேள்விக்கான
பதிலையும், கொடூரன் பல்வாள்தேவன் ஆட்சிக்கு அமரேந்திர பாகுபதி முடிவு
கட்டியது எப்படி என்பதையும் சுவாரஸ்யம், பிரமாண்டம், விறுவிறுப்பு
குறையாமல் சொல்லியிருக்கிறது பாகுபலி 2. மகேந்திர பாகுபலிக்கு (பிரபாஸ்)
ராஜமாதா சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) பட்டாபிஷேகம் செய்து வைத்தது,
பல்வாள்தேவனுக்குப் (ராணா) பிடிக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்ற சரியான நேரம்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். திக்விஜயத்தில் குந்தலதேசத்தின் இளவரசி
தேவசேனாவை (அனுஷ்கா) பாகுபலி காதலிப்பதை அறியும் பல்வாள்தேவன், தனக்கு அரச
பதவி தேவையில்லை; தேவசேனா வேண்டும் என்கிறார். பாகுபலி காதலிப்பதை அறியாத
சிவகாமி, தேவசேனாவை மணம் முடித்து வைப்பதாக பல்வாள்தேவனுக்கு
வாக்களிக்கிறார்.
காதலிப்பவளையே கைது செய்து வருமாறு உத்தரவு
வருகிறது, பாகுபலிக்கு. ‘உன் கற்புக்கும், உயிருக்கும் நான் பாதுகாப்பு’
என்று சொல்லி, தேவசேனாவை மகிழ்மதி தேசத்துக்கு அழைத்து வருகிறார் பாகுபலி.
அரசியல் விளையாட்டில் நாடு பல்வாள்தேவனுக்கும், தேவசேனா பாகுபலிக்கும்
கிடைக்கப்பெறுகிறது. பிறகு நடக்கும் சதியால், காதல் மனைவியின் மானத்தைக்
காப்பாற்ற அரசு பதவி, நாடு அத்தனையும் இழந்து வெளியே வருகிறார் பாகுபலி.
பல்வாள்தேவன் தனது சூழ்ச்சியால், பாகுபலியைக் கட்டப்பாவை வைத்துக் கொன்று,
ராஜாமாதா சிவகாமி தேவியையும் நாட்டை விட்டு விரட்டுகிறார். நீருக்குள்
மூழ்கினாலும், குழந்தையை நீருக்கு உயரே தாங்கிப் பிடித்துக் காப்பாற்றி,
உயிர் துறக்கிறார் சிவகாமி.
பல்வாள்தேவனால் அடிமையாக்கப்படுகிறார்
தேவசேனா. மகன் அமரேந்திர பாகுபலி, அடிமைச்சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும்
தன் தாய் தேவசேனாவையும், மகிழ்மதியையும் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது
மீதி கதை. பிரபாஸ் தொடங்கி நாசர் வரை எங்குமே நடிகர்களைக் காணவில்லை.
பாகுபலி, தேவசேனா, பல்வாள்தேவன், கட்டப்பா, சிவகாமி, பிங்கலத்தேவர் என,
எல்லோரையும் அந்தந்தக் கேரக்டர்களாகவே பார்க்க முடிகிறது. பிரபாஸ்,
அனுஷ்கா, ராணா, நாசர், சத்யராஜ் என அனைத்து கேரக்டர்களும், அவர்களின்
யதார்த்த நடிப்பால் மனதில் ஆழமாகப் பதிகிறது. மகேந்திர பாகுபலியும்,
அமரேந்திர பாகுபலியும் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்கிறார்கள். வித்தியாசம்
காட்டியிருக்கலாம். முதல் பாகத்தில் ஆட்சி செய்த தமன்னா, இதில்
அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் போல் வருகிறார்.
முதல் பாகம் போல்
பாடல்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. இதுபோன்ற சில சிறு குறைகள்தான்.
மரகதமணியின் பின்னணி இசை, செந்தில்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ்
காட்சிகள் அனைத்தும் செம மிரட்டல். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாகச்
சிந்தித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மதன் கார்க்கியின் வசனங்கள்
இயல்பாக இருக்கிறது. பேன்டசி படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்றாலும்,
லாஜிக் மிஸ் ஆகாத அளவுக்கு மிக நேர்த்தியாக இருக்கிறது ராஜமவுலியின்
திரைக்கதை. 3ம் பாகத்துக்கு யோசிக்கவிடாமல் கத்திரி போட்டு, படத்துக்கு
விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் எடிட்டர் வெங்கடேஸ்வர
ராவ்.எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் ராஜமவுலி ஜெயித்துவிட்டார்.
இந்திய சினிமாவின் முக்கியமான அடையாளங்களில் இனி பாகுபலி 2வும் இடம்பெறும்.