ஹாலிவுட்டின் புகழ் பெற்ற டைரக்டர் கிறிஸ்டோபர் நோலன் மும்பையில் நடைபெறும் திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார். இன்சப்ஷென், மெமன்ட்டோ, தி பிரஸ்டீஜ், பேட்மேன் பிகின்ஸ், இந்த ஆண்டு ஆஸ்கரில் 3 விருதுகளை வென்ற டன்கிர்க் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். டிஜிட்டல்மயத்தில் சினிமாவின் எதிர்காலம் தொடர்பான கருத்தரங்கம் மும்பை டாடா தியேட்டரில் மார்ச் 31ல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கவே கிறிஸ்டோபர் நோலன் வர உள்ளார். அவருடன் இந்திய திரையுலகினர் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் இதில் நடைபெறுகிறது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ஆமிர்கான், ஷாருக்கான், இயக்குனர்கள் ஷியாம் பெனகல், மணிரத்னம், அனுராக் கஷ்யப், பர்ஹான் அக்தர் உள்பட பலர் இதில் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் நோலன் கலந்துரையாட உள்ளார். நோலனிடம் அவர்கள் கேள்விகளும் கேட்க உள்ளனர்.