டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், தனது 15 வயதில் ஆசிட் வீச்சுக்கு ஆளானார். அவரை ஒரு தலையாக ஒருவன் காதலித்தான். அந்த காதலை லட்சுமி ஏற்கவில்லை. இதனால் லட்சுமி முகத்தில் அவன் ஆசிட் வீசினான். ஆனாலும் நம்பிக்கை யை இழக்காத லட்சுமி, அந்த நபரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தந்தார். அமெரிக்க அதிபராக இருந்தபோது ஓபாமா அவரை அழைத்து பாராட்டினார். சில வருடங்களுக்கு பிறகு அசோக் தீட்சித் என்பவர் லட்சுமியை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை உள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார் லட்சுமி. இவரது வாழ்க்கையை இயக்குனரும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் படமாக எடுக்கிறார். இதில் லட்சுமி வேடத்தில் நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தமாகியுள்ளார்.