வல்லினம்
3/1/2014 2:20:10 AM
கல்லூரி மாண வன் நகுலன் கூடைபந்து வீரன். விளையாட்டின் போது தனது தவறான நடத்தையால் உயிருக்கு உயிரான நண்பனை இழக்கிறார். அது விபத்துதான் என்றாலும் மனசாட்சி உறுத்த திருச்சியிலிருந்து சென்னை கல்லூரிக்கு மாறுகிறார். இனி விளையாடவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த நகுலனை சூழ்நிலை மீண்டும் பந்தை தூக்க வைக்கிறது. கிரிக்கெட்டுக்கு முன்னுரிமையும், வசதியும் தரும் கல்லூரி நிர்வாகம், கூடைப்பந்து விளையாட்டை மதிப்பதில்லை. கூடைப்பந்து விளையாட்டின் மானம் காக்க, இது ஒன்றும் குறைவான விளையாட்டல்ல என்பதை நிரூபிக்க மீண்டும் மைதானத்தில் குதிக்கிறார் நகுலன். அவர் நினைத்தது நடந்ததா என்பது மீதிக் கதை. விளையாட்டை களமாக கொண்டு நிறைய படங்கள் வந்திருந்தாலும் அவை ஒரே விளையாட்டுக்குள் நடக்கும் மோதலாக இருக்கும். முதன் முறையாக கிரிக்கெட்டையும், கூடைப்பந்தையும் மோதவிட்டு கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.
அச்சு அசலான கூடைப்பந்து வீரனாக மாறி இருக்கிறார் நகுலன். தேர்ந்த பயிற்சி, கடின உழைப்பால் கூடைப்பந்தின் இக்கட்டான தருணத்தின் ஸ்பெஷல் ஷாட்டுகளை கூட ஸ்டைலாகச் செய்திருக்கிறார். மிருதுளாவுடனான காதல், அவள் கோடீஸ்வர வீட்டு பெண் என்று தெரிந்ததும் தாழ்வு மனப்பான்மையால் விலகிச் செல்வது, காதலால் விளையாட முடியாமல் தவிப்பது என ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுகளின் கலவையாக கலங்கடிக்கிறார் நகுலன். மிருதுளாவுக்கு முதல் படம். அது தெரியாத அளவுக்கு கனமான கேரக்டரை எளிதாகத் தாங்குகிறார். அவ்வப்போது காமெடி ரிலாக்ஸ் கொடுக்கும் ஜெகன், நண்பனாக வரும் அம்ஜத், கிரிகெட் கேப்டனாக முறைத்துக் கொண்டே திரியும் சித்து எல்லோருமே பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.
நகுலின் சின்ன சின்ன விஷயங்களால் கோடீஸ்வர வீட்டு பெண், காதல் வயப்படுவதும், ஆண்கள் கழிவறைக்குச் சென்று காதல் பேசுவதும், கோடம்பாக்க சினிமாக் காதல். காதலை கைவிட வேண்டும் என்கிற நிபந்தனையோடு அவளது தந்தை கோடிக் கணக்கில் ஸ்பான்சர் செய்வதில் லாஜிக் இல்லை. தமன் இசையில் பாடல்கள் இனிமை. கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய வெளிச்சத்தில் மற்ற விளையாட்டுகள் இருளில் தவிக்கிறது என்ற கோபத்தை திரைக்கதையாக்கி இருப்பதோடு, அதை நேர்த்தியாகவும், நேர்மையாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
முறையாக நடத்தப்படும் ஒரு விளையாட்டின் இறுதிப்போட்டியில், திடீரென்று கறுப்பின வீரர்களை கொண்ட அணியை களம் இறக்குவது சாத்தியம் இல்லை. நீங்க எங்களை அணியில் சேர்க்கவில்லை என்றால் உங்கள் மகளை காதலித்து உங்களை மாமாவாக்கி விடுவோம் என்று ஒரு பிரின்ஸ்பலை மிரட்ட முடியுமா என்ன? இப்படி சில விஷயங்கள் மனசுக்குள் வந்து போவதை தவிர்க்க முடியாவிட்டாலும் ரசிக்கலாம்.
lamisil 1
lamisil lamisil pastillas
online apotheke potenzmittel
viagra apotheke viagra kaufen apotheke osterreich
lilly coupons for cialis
ismp.org prescription discount coupon
abortion pill quotes
achrom.be chemical abortion pill
cialis online coupon
ambito20.it prescription discount coupons
cialis online coupon
ambito20.it prescription discount coupons
cialis online coupon
ambito20.it prescription discount coupons
naltrexone for alcohol cravings
go naltrexone pain management
lowdosenaltrexone org
site naltrexone nausea
opioid antagonists for alcohol dependence
link naltrexone fibromyalgia side effects
naltrexone mechanism of action
click low dose naltrexone australia