காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம் என ஒரு சில தமிழ் படங்களில் நடித்த சார்மி பிறகு தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தினார். 2 ஆண்டுக்கு முன் இயக்குனர் புரி ஜெகநாத் இயக்கிய ‘ஜோதி லட்சுமி’ படத்தில் நடித்தவர் அதன்பிறகு புதிய படம் எதிலும் நடிக்கவில்லை. புரி ெஜகநாத்தும், சார்மியும் காதலித்து வந்தனர். புரி ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்த காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை. புரியுடன் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்தார் சார்மி. அந்த எண்ணம் ஈடேறவில்லை. இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரேக் அப் செய்துகொண்டனர். புரி, சார்மி பிரேக் அப் சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் இருவரும் இணைந்த னர். புரியின் சொந்த பட நிறுவன பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி அலுவலக நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார் சார்மி. இவர்களின் புதுப்பிக்கப்பட்ட உறவுபற்றி இதுவரை வெளியில் தெரியாமலிருந்த நிலையில் தற்போது அதை அம்பலப்படுத்தியிருக்கிறார் சார்மி. டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சார்மி,’போர்க்சுக்கல் நாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்று இருக்கிறேன். உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறேன்’ என்று தனது தோழியும் நடிகையுமான திரிஷாவுக்கு தெரிவித்துள்ள பதிலில் குறிப்பிட்டிருக்கிறார். புரி ஜெகநாத் தற்போது என்.டி.பாலகிருஷ்ணா, ஸ்ரேயா நடிக்கும் புதியபடம் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு போர்ச்சுகல் நாட்டில் நடந்து வருகிறது. இப்படத்தில் கெஸ்ட் ரோலில் சார்மி நடிப்பார் என்று கூறப்படுகிறது.