தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. புதுமுக நடிகை எத்தனை புதுவரவாக வந்தாலும் கோலிவுட்டில் அவருக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. அதிக படங்களில் நடித்துள்ள நயன்தாரா, போதிய அளவு சம்பாதித்தும் விட்டார். இனி அவர் நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டியது தான் அடுத்த இலக்கு என்று தெரிவித்துள்ளார். தற்போது இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவுடன், அதர்வா, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். த்ரில்லர் கலந்த இந்த படத்தை போல கதையம்சம் கொண்ட கதைகள் மற்றும் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.