‘ரங்கூன்’ படத்தையடுத்து ‘இவன் தந்திரன்’ பட ரிலீஸுக்கு காத்திருக்கிறார் கவுதம் கார்த்திக். அவர் கூறியது: நான் பிரிட்டிஷ் போர்டிங் பள்ளியில் படித்ததால் ஆங்கில படம் மட்டும்தான் பார்க்க முடியும். அதனால் என் தாத்தா முத்துராமன், தந்தை கார்த்திக் நடித்த படங்களை பார்க்க முடியவில்லை. இப்போதுதான் அவர்கள் படங்களை பார்க்கிறேன். மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானபோது முதல் காட்சியிலேயே நான் சொதப்பினேன். பிறகு ஒவ்வொரு காட்சியாக நடிக்க வைத்தார். நான் சோர்ந்துபோயிருக்கும் நேரங்களில் எனக்கு ஊக்கம் தருபவர் என் தாய்தான். தந்தையை பொறுத்தவரை, ‘நீயே உன் உழைப்பில் முன்னேறி மேலே வா’ என்று கூறிவிடுவார். நடிக்க வந்த புதிதில் கேமிரா முன் நடித்துவிட்டு வந்தால்போதும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை பிறகுதான் உணர ஆரம்பித்தேன். ‘நடிகை பிரியா ஆனந்த்துடன் காதலா?’ என்கிறார்கள். நான் கோ எஜுகேஷன் பள்ளியில் படித்ததால் பெண்களிடம் எளிதாக நட்பு முறையில் பழகுவேன். நான் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே பிரியா ஆனந்தை எனக்கு தெரியும். அப்போதே காபி ஷாப் செல்வோம். ‘முத்துராமலிங்கம்’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தோம். அவருடன் காதல் இல்லை. ஆனால் எனது திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும். அதுவும் 35 வயதுக்கு பிறகுதான். ‘எதிர்காலத்தில் பிரியா ஆனந்துடன் காதல் மலர்ந்தால் என்ன செய்வீர்கள்?’ என்கிறார்கள். அப்படி நடந்தால் அவரை மணந்துகொள்வேன்’.