எமி ஜாக்ஸனுக்கு தமிழில் படம் வெளிவந்து முழுசாக ஒரு வருடம் இடைவெளி ஆகிவிட்டது. ரஜினியுடன் நடித்த 2.0 பட ரிலீஸை கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்தார். அப்படத்துக்கு பிறகு தனது மார்க்கெட் நிலமையே வேற என்று எண்ணியவர் புதியபடங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் காத்திருந்தார். ஆனால் படம் 2018 ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப்போனதில் அப்செட் ஆனார். கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டில் ஐ, தங்கமகன், கெத்து, தெறி, தேவி என 5 படங்கள் வெளியானதில் கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடித்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தார் எமி. ஆனால் கடந்த ஆண்டில் அவருக்கு ஒரு படம் கூட வெளியாகவில்லை. சீனியர் ஹீரோயின்கள் கவர்ச்சியில் வாள் சுழற்றிக்கொண்டிருக்கும் நிலையில் தன்னை ரசிகர்கள் மறந்துவிடக்கூடும் என்று எண்ணிய எமி அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் சகதோழியுடன்(அவரும் டூபீஸ் உடைதான்) இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து திணறடித்திருக்கிறார். லோ ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் கச்சை வழியாக கவர்ச்சியை வழியவிட்டு இளசுகளுக்கு தூக்கத்தை கெடுத்திருக்கிறார். அந்த படங்களுக்கு, ‘பிறந்தநாள் தேவதைகள்’ என்று கேப்ஷனும் போட்டிருக்கிறார்.