பாலிவுட்டிலிருந்து கோலிவுட் வருகிறார் ஷ்ரத்தா கபூர். பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு சம்பளமாக ரூ. 3 கோடி தரப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்க முடிவானது. அதில் சாய்னா வேடத்தில் நடிக்க ஷ்ரத்தா ஒப்பந்தம் ஆனார். சில மாதங்களுக்கு முன் ஆந்திரா வந்த ஷ்ரத்தாவை சாய்னா தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்ததுடன் பேட்மின்டன் விளையாட்டின் நுணுக்கங்களை சொல்லித் தந்தார்.நடிகை ஷ்ரத்தாவின் மார்க்கெட் நிலவரம் தற்போது எகிறிவிட்டது. அது சாய்னா பட பட்ஜெட்டுக்கு தலைவலியாகி இருக்கிறது. இப்படக்குழுவினர் ஏற்கனவே நிர்ணயித்திருந்த பட்ஜெட் தற்போது ஷ்ரத்தாவின் மார்க்கெட் நிலவரம் உயர்ந்திருப்பதால் அந்தளவுக்கு அவருக்கு சம்பளம் தர முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ஷ்ரத்தாவை நீக்கிவிட்டு வேறு நடிகையை சாய்னா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பட தரப்பு ஆலோசித்து வருகிறது. இந்த தகவல் கிசுகிசுவாக வெளியானதை அறிந்த ஷ்ரத்தா வருத்தத்தில் இருக்கிறாராம். நல்ல படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்று தோழிகளிடம் முணுமுணுக்கிறாராம்.