80, 90களில் திரையுகில் சற்று பூசினாற்போன்ற தோற்றம் கொண்ட ஹீரோயின்களுக்கு வரவேற்பு இருந்தது. பாலிவுட் ஹீரோயின்கள் கோலிவுட் பக்கம் தலைகாட்டத் தொடங்கியதும் ஸ்லிம் நடிகைகளுக்கு மவுசு ஏற்பட்டது. சற்று பூசினாற்போன்ற தோற்றம் கொண்ட நடிகைகளும் உணவு கட்டுப்பாடு, கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை, உடற்பயிற்சி செய்து தங்களது தோற்றத்தை ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டனர். அனுஷ்கா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் இந்த முயற்சியில் இன்னமும் ஈடுபட்டு வருகின்றனர். குஷ்புபோல் புஸ்புஸ் என தோற்றத்துடன் இருந்த ஹன்சிகாவும் சமீபத்தில் தனது உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லிபிச்சானாகிவிட்டார்.டோலிவுட்டில் ‘மாஹனுபாவுடு’ படம் மூலம் பிரபலமானவர் மெஹரின். அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் நடித்தார். அழகும், கலரும் இருந்தாலும் அவரது பூசினாற்போன்ற தோற்றம் மைனஸாகி இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘துளி பிரேமா’ படத்தில் நடிக்க முதலில் மெஹரினுக்கு வாய்ப்பு வந்தது. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பட இயக்குனர் வெங்கி, ஹீரோயின் பாத்திரத்துக்கு ஒல்லியான, நன்றாக முகபாவம் காட்டி நடிக்கக்கூடிய நடிகைதான் தேவை என ஒற்றை காலில் நின்றதுடன், மெஹரின் முன்பைவிட தற்போது கூடுதல் வெயிட் போட்டதால் அவரை ஏற்க மறுத்தார். இதையடுத்து அந்த வாய்ப்பு ராசி கண்ணாவுக்கு சென்றது. ராசி கண்ணாவும் பூசினாற்போன்ற தோற்றத்துடன் இருந்தவர்தான். சமீபத்தில்தான் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.