பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஒரு சில பாடகர்களே இசை அமைப்பாளர்களாகவும் பொறுப் பேற்றிருக்கின்றனர். பாடகிகளில் இசை அமைப்பாளர் பொறுப்பு ஏற்பது அபூர்வம். 4 தலைமுறை நட்சத்திரங்களுக்கு சுமார் 40 ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பவர் பி.சுசீலா. முதன்முறையாக அவர் இசை அமைப்பாளராக மாறியிருக்கிறார். நீட் தேர்வு சர்ச்சையில் இறந்த மாணவி அனிதாவின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் கதை டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ். இப்படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பு ஏற்றிருக்கிறார் பி.சுசீலா. இதுகுறித்து அவர் கூறும்போது,’என் மனதை பெரிதும் பாதித்த பெண் மாணவி அனிதா. அதனால் இப்படத்துக்கு இசை அமைக்கிறேன்’ என நெகிழ்ச்சியோடு கூறினார். அஜய் எழுதி இயக்குகிறார். எஸ்.மோகன் ஒளிப்பதிவு. ஆர்.ஜே.பிக்சர், ரன் ஸ்டுடியோ தயாரிப்பு. அனிதா கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்கிறார். அவரது தந்தையாக ஆய்வுகூடம் படத்தில் நடித்த ராஜகணபதி நடிக்கிறார். இவர்களுடன் பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.