மேயாத மான் படத்தில் தங்கை வேடத்தில் அறிமுகமானவர், இந்துஜா. இப்போது பில்லா பாண்டி, மெர்க்குரி, பூமராங், உதயநிதி மற்றும் விக்ரம் பிரபு படம் என நடித்து வருகிறார். ‘நான் நடிகையாவதற்கு முன், எந்த சினிமா கம்பெனியில் ஆடிஷன் நடந்தாலும் சென்று வருவேன். விதவிதமாக எடுத்த போட்டோக்களைக் கொடுப்பேன். ஆனால், ஒரு படத்தில் கூட என்னைத் தேர்வு செய்யவில்லை. என்றாலும், முயற்சி செய்வதை மட்டும் நான் நிறுத்தவில்லை. முதலில் குறும்படங்களில் நடித்தேன். பிறகு மேயாத மான் வாய்ப்பு அமைந்தது. இதில் தங்கை வேடத்தில் நடிக்கிறாயே, உன் எதிர்காலம் அவ்வளவுதான் என்று பலர் கிண்டல் செய்தார்கள். ஆனால், நான் மனம் தளரவில்லை. ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என்று அதிக நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அதற்கான பலன் இப்போது கிடைத்து இருக்கிறது’ என்ற அவர், சென்னை வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.