சமுத்திரக்கனி படம் இயக்குவதை குறைத்துக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஹீரோ, குணசித்ரம், வில்லன் என எல்லா வேடங்களையும் ஏற்கிறார். ரஜினியின், ‘காலா’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கும் புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. சமீபத்தில் தாங்கள் இணைவதுபற்றி சீனுவும், சமுத்திரக்கனியும் தகவல் வெளியிட்டனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தனர்.இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, ‘கடந்த 6 மாதங்களாக இருவரும் இணைந்து பணியாற்றுவதுபற்றி பேசி வந்தோம். தற்போது முடிவாகி இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப் படவில்லை. முன்னதாக விஜய்சேதுபதி நடிக்கும் மாமனிதன் படம் இயக்க உள்ளேன். அவர் வேறு படங்களில் நடித்து வருகிறார். அவரது கால்ஷீட் கிடைத்ததும் இப்படத்தை முதலில் தொடங்குவேன். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர்ராஜா மூவரும் இணைந்து இப்படத்துக்கு இசை அமைக்க உள்ளனர். தற்போது திரையுலகில் வேலை நிறுத்தம் நடப்பதால் அது முடிந்தபிறகு பணிகள் தொடங்கும். சமுத்திரக்கனி நடிக்கும் படம் கிராமத்து பின்னணியில் உருவாகிறது. கிராமத்தில் நேர்மை மாறாத குணம் படைத்தவராக அவர் வேடம் ஏற்கிறார். அவருக்கு வசனங்கள் குறைவாகவே இருக்கும். ஜோடியும் கிடையாது’ என்றார்.