• முகப்பு

    ✤

  • கோலிவுட்

    ✤

    • கோலிவுட் செய்திகள்

    • கோலிவுட் கிசு கிசு

    • சீக்ரெட் சரோஜா

    • கோடம்பாக்கம் கோடங்கி

    • நேர் காணல்

  • பாலிவுட்

    ✤

    • பாலிவுட் செய்திகள்

    • நடிகர்கள் கேலரி

    • நடிகைகள் கேலரி

    • பாலிவுட் மூவி கேலரி

  • ஹாலிவுட்

    ✤

    • ஹாலிவுட் செய்திகள்

    • நடிகர்கள் கேலரி

    • நடிகைகள் கேலரி

    • ஹாலிவுட் மூவி கேலரி

  • ‌சினி கேலரி

    ✤

    • கோலிவுட் மூவி கேலரி

    • நடிகர்கள் கேலரி

    • நடிகைகள் கேலரி

    • நட்சத்திர திருமணங்கள்

    • ஆடியோ வெளியீடு

    • சூட்டிங் ஸ்பாட்

    • மற்றவை

  • டோலிவுட்

    ✤

    • நடிகர்கள் கேலரி

    • நடிகைகள் கேலரி

    • டோலிவுட் மூவி கேலரி

  • வீடியோ

    ✤

    • ஸ்பெஷல்

    • ‌ட்ரெ‌ய்ல‌ர்

  • விமர்சனம்

    ✤

  • கவர்ச்சி

    ✤

  • மாடல்ஸ்

    ✤

  • RSS

    ✤

முகப்பு➛நேர் காணல்➛செய்திகள்➛

படமாகிறது ஸ்மார்ட்போன் விபரீதம்!

படமாகிறது ஸ்மார்ட்போன் விபரீதம்!
4/27/2018 11:05:49 AM

காலேஜ் பாய் ஹீரோ. இணையதள ஹேக்கர். அவர் சந்திக்கிற ஒரு பிரச்னையை தன்னோட திறமையால எப்படி எதிர்கொள்கிறாருன்னு விறு விறுப்பா சொல்கிற படம் கீ என்றார் அறிமுக டைரக்டர் காளீஸ்.

உங்க சினிமா பயணம் எப்படி தொடங்கிச்சு?

நான் சென்னை பையன்தான். அண்ணா பல்கலையில் எம்சிஏ படிச்சேன். படிக்கிற சமயத்துல புரபசர்கள் பண்ற டார்ச்சரை வச்சு ஃபன்னா ஒரு ப்ளே பண்ணினேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அந்த சமயம்தான், சினிமா ஆசை மனசுக்குள்ள துளிர்விட்டுச்சு. எல்லாத்தையும் விட்டுட்டு, கோடம்பாக்கத்துக்கு வந்துட்டேன். யாரடி நீ மோகினி படத்துல மித்ரன் ஜவஹர்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்தேன். அதுக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்துலேருந்து மயக்கம் என்ன வரை செல்வராகவன் சார்கிட்ட ஒர்க் பண்ணினேன். 2013ல் ஒரு கதை பண்ணினேன். அதுதான் கீங்கிற படம்

ஏன் இந்த இடைவெளி?

கதை எழுதி பதினஞ்சு நாளுக்குள்ள ஜீவாவை சந்திச்சு சொல்லிட்டேன். அவருக்கும் கதை பிடிச்சிபோச்சு. புரொடியூசர் ஒருத்தர் கிடைச்சு, படத்தை ஆரம்பிக்க இருந்தோம். திடீரென அவர் விலகிட்டார். அதுக்கு பிறகு நிறைய புரொடியூசர்களிடம் இந்த கதை போச்சு. அவங்க எல்லோரும் கேட்டது, இந்த மாதிரியெல்லாம் நடக்குமா? இது எப்படி ஜனங்க ஏத்துக்குவாங்க? இதை எப்படி திரையில கொண்டு வரமுடியும்கிறதுதான். அவங்களுக்கு கதை மேல முழுமையா நம்பிக்கை வரல. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இந்த கதையோடு அலைஞ்சேன்.

இதுல இருக்கிற கமர்ஷியல் அம்சங்கள் நல்லா இருக்கு. ஆனா, படத்தோட முக்கியமான அந்த பிளாட்டை மாத்திடுங்கன்னு சொன்னாங்க. இந்த படமே அதுக்குதான். அதை எப்படி மாத்த முடியும்னு மறுத்துட்டேன். யாரும் தயாரிக்க முன் வரல. முன்வந்தவங்களும் சில காரணங்களால ஷூட்டிங்கை தள்ளிப்போட்டபடி இருந்தாங்க.  அப்போ நான் ஒரு முடிவுக்கு வந்தேன். கமர்ஷியல் வேல்யூவைதான் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறாங்க. அதனால பேசாம ஒரு காமெடி படம் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன்.

இந்த கதையை ஒதுக்கி வச்சிட்டு, காமெடி கதையும் பண்ண ஆரம்பிச்சேன். இதை தெரிஞ்சி, ஜீவா ஷாக் ஆனார். ஏன் பாஸ் இப்படி பண்றீங்க. கொஞ்சம் பொறுங்க. கண்டிப்பா அதே கதையை நாம பண்ணலாம்னு தைரியம் கொடுத்தார். இந்த கதை மேல எனக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்துச்சோ அதே அளவு நம்பிக்கையோடு இருந்தவர் ஜீவா. இந்த படம் டேக்ஆஃப் ஆக அவரும் முக்கிய காரணம். அதுக்கு பிறகு தயாரிப்பாளர் கிடைச்சி, போன வருஷமே 80 சதவீத ஷூட்டிங் முடிச்சோம். பிறகு சில காரணங்களால ஷூட்டிங் தொடங்க முடியல. இப்போ முழுமை அடைஞ்சி, ரிலீசுக்கு தயாராயிட்டோம்.

முதல் படம் பெரும் போராட்டமா அமைஞ்சிருக்கு. சினிமாவே வேணாம்னு சோர்ந்து போயிருக்கீங்களா?

அப்படி நினைச்சிருந்தா, கீ படத்தை முடிச்சிருக்க முடியாது. கண்டிப்பா பெரும் போராட்டம்தான். தயாரிப்பாளர்கள் கொஞ்சம் பொறுத்துக்குங்கன்னு சொல்லும்போது, அங்கேயே நான் நின்றுவிடுவேன். நேரம், பணம், வாழ்க்கைன்னு எல்லாமே என்னை கடந்து போயிட்டே இருக்கும். திரும்ப அசிஸ்டென்ட் டைரக்டரா கூட சேர முடியாத சூழல். படம் பண்றேன்னு போனீயே, பண்ணலியான்னு கேட்பாங்க. தயாரிப்பாளர்களும் முடியாதுன்னு சொல்ல மாட்டாங்க. அதனால படம் தொடங்குமா, தொடங்காதான்னு தெரியாமலேயே காத்திருப்பேன். இப்படி 5 வருஷம் ஒரு ரூமுக்குள்ளேயே முடங்கி கிடந்தேன். ஆனா, எப்போ வந்தாலும் இந்த கதையை ஜெயிக்கும்கிற நம்பிக்கையை மட்டும் இழக்கல.

அப்படி என்ன கதையிது?


தொல்காப்பியத்துல கீங்கிற சொல்லுக்கு எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அவ்வளவு தீமையும் உள்ளதுங்கிறதுதான் அர்த்தம். ஸ்மார்ட் போன் கைக்கு வந்த பிறகு நம்முடைய வாழ்க்கை முறையில நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. சின்ன குழந்தைகள்லேருந்து வயசானவங்க வரைக்கும் இதை இயக்கிட்டு இருக்காங்க. ஆனா, உண்மையில இந்த ஸ்மார்ட் போன்தான் நம்மளை இயக்கிட்டு இருக்கு. இந்த தொழில்நுட்பத்துல இருக்கிற இன்னொரு ஆபத்தான முகத்தை படத்துல காட்டியிருக்கேன். அது நாம பார்க்காத உலகமா இருக்கும். ஆனா, அது நிஜம்.

இப்படியொரு நிஜத்தை கண் முன்னாடி கொண்டு வர்றப்போ கண்டிப்பா அது ரசிகர்களுக்கு ஷாக்கா இருக்கும். அதுக்காக இதை பக்கா சீரியஸ் திரில்லர் படமா எடுக்கல. பக்கா கமர்ஷியல் படமாத்தான் பண்ணி இருக்கேன். படத்துல லவ், சென்டிமென்ட், காமெடின்னு எல்லா அம்சமும் கலந்திருக்கும். ஆனா, கதைக்களம் அதுதான். அதுலேருந்து விடுபட்டு, கமர்ஷியல் அம்சங்களுக்காக படம் தடம் மாறாது.

அந்த கதை பி்ன்னணியோடு ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். தமிழ்நாட்டுல 8 கோடி பேர் இருக்காங்க. தியேட்டருக்கு வர்றது 2 கோடி பேர்தான். அதுல 80 சதவீதம் பேர், என்டர்டெயின்மென்ட்டுக்காகவே படம் பார்க்க வர்றாங்க. எவ்வளவு கனமான சப்ஜெக்ட்டை கையில எடுத்தாலும் அதை அவங்களுக்கு புரியுற மாதிரி, கமர்ஷியலா சொல்லணும். இது ஷங்கர் சாரோட தியரி. அதைத்தான் நான் இதுல ஃபாலோ பண்ணி இருக்கேன்.

புளு வேல் கேமை பின்னணியா வச்சி கதை பண்ணி இருக்கிறதா தகவல் வந்துச்சே?

அந்த மாதிரியான ஒரு விஷயம்தான் படத்துல இருக்கு. ஆனா எந்த விளையாட்டையும் இதுல வைக்கல. ஏன்னா, 2013லேயே இந்த கதையை உருவாக்கிட்டேன். அப்போ புளு வேல் மாதிரியான ஒரு விஷயத்தைதான் படத்துல வச்சேன். அப்போ, இதுல எல்லாம் எப்படி சாத்தியம்னு கேட்டவங்க, இப்போ அட்வான்ஸா இந்த விஷயங்களை நான் சொல்லி இருக்கேன்னு ஒத்துக்கிறாங்க. இது ரெண்டு ஹேக்கர்ஸ் பற்றிய கதை. நல்லதுக்காக ஹேக் பண்ற ஒருத்தரும் கெட்டதுக்காக ஹேக் பண்ற ஒருத்தருக்குமான மோதல்.

ஜீவாவோடு மோதுற அந்த வில்லன் யார்?

மலையாள நடிகர் பத்மசூர்யா. அங்கே ஹீரோவாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பண்ணிட்டு இருக்கார். இந்த படத்துக்கு பிறகு கவனிக்கப்படுவார். நிக்கி கல்ராணி காலேஜ் கேர்ள் வேடம். ஹோம்லி லுக்லதான் வருவாங்க. தமிழ் மேல அதிகம் பற்றுள்ள ஒரு பொண்ணு. தூய தமிழ் பேசுற வித்தியாசமான பொண்ணு கேரக்டர். கிளாமர் ஏரியாவுக்காக அனேகா ஸ்ருதி இருக்காங்க. வில்லத்தனம் கலந்த கேரக்டர். ஆர்.ஜே.பாலாஜி, தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், சுகாசினி நடிச்சிருக்காங்க.

கதையில எந்த அளவுக்கு அதை எளிமை படுத்தி இருக்கீங்க?

இன்னிக்கு செல்போன் இல்லாத கிராமங்கள் இருக்கா? ஸ்மார்ட் போனை எப்படி ஆப்ரேட் பண்றதுன்னு கிராமங்கள்ல இருக்கிற சின்ன பசங்களுக்கும் தெரியுது. ஜிமிக்கி கம்மல் பாட்டு சமூக வலைத்தளத்துல வந்த அடுத்த சில நிமிஷங்கள்ல, பல லட்சம் பேர் பார்க்கிறாங்க. அதுல சென்னையை விட டவுன்லேயும் கிராமத்துலேயும் இருக்கிறவங்கதான் அதிகம். அதனால பி, சிங்கிறதெல்லாம் ஏமாத்து வேலை.

இன்னும் 6 மாசத்துல சினிமாலேருந்து அப்படியொரு ஏரியாவே இல்லாம போகும். பி அண்ட் சி ஏரியாங்கிறது படிச்சவங்களையும் படிக்காதவங்களையும் பிரிச்சு பார்க்கிறது கிடையாது. அறிவுள்ளவங்க, அறிவில்லாதவங்கன்னு பிரிச்சி பார்த்த விஷயம். இப்போ எல்லோருக்குமே தொழில்நுட்ப அறிவு அதிகமா இருக்கு. அதுலேயும் கிராமத்து பசங்க செம டேலன்ட். அதனால என் படத்துக்கு அந்த பிரச்னையே வராது.

2013ல் எழுதிய கதையை, இப்போ மாறியிருக்கிற டெக்னாலஜிக்கு ஏற்ப மாத்தி இருக்கீங்களா?

அதுக்கு அவசியம் ஏற்படல. ஏன்னா, நான் அதை எழுதும்போதே அட்வான்ஸாதான் யோசி்ச்சு எழுதி இருக்கேன். அதனாலதான் அப்போ பல பேர், இப்படி நடக்குமான்னு யோசிச்சாங்க. இப்போ அதை ஏத்துக்கிறதுக்கு காரணம், அந்த விஷயமெல்லாம் இப்போ சாத்தியம்னு தெரிய வந்திருக்கு. அதனால எந்த மாற்றமும் பண்ணல. இப்போ நடக்கிற மாற்றத்துக்கு என் கதை பொருந்தி வந்திருக்கு.

செல்வராகவனோட சிஷ்யன் நீங்க. அவரோட ஸ்டைல் ஆஃப் பிலிம் மேக்கிங்கை உங்களிடம் எதிர்பார்ப்பாங்களே?

கண்டிப்பா அவரோட பாணியில என் படம் இருக்காது. அவர் ஒரு லெஜன்ட். அவரைப் போல அவரால் மட்டும்தான் எடுக்க முடியும். அவரைப் போல படம் எடுக்கணும்கிறதுக்காக அவர்கிட்ட நான் ஒர்க் பண்ணல. அவரிடம் நான் தொழிலை கத்துக்கிட்டேன். அந்த தொழிலை என்னோட ஸ்டைல்ல கொடுத்தால்தான் நான் யாருங்கிறது ரசிகர்களுக்கு தெரியும். அவரை நான் காப்பி அடிக்க முடியாது.

Tags:
இணையதள ஹேக்கர் ஜுவா நிக்கி கல்ராணி காளீஸ் கீ
Movie Gallery
  • நாடோடிகள் 2

    நாடோடிகள் 2
  • காதல் முன்னேற்ற கழகம்

    காதல் முன்னேற்ற கழகம்
  • வந்தா ராஜாவாதான் வருவேன்

    வந்தா ராஜாவாதான் வருவேன்
  • தேவ்

    தேவ்
-----

டிரெய்லர்கள்

  • என்.ஜி.கே.
  • இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
  • அலாவுதீனின் அற்புத கேமரா
  • 90 எம்.எல்.
  • அயோக்யா
  • நீயா 2
  • கண்ணே கலைமானே
  • வர்மா
  • யாத்ரா

கிசு கிசு

  • திருமணத்துக்கு தயாரான சர்வமான நடிகர்
  • கடை திறப்புக்கு தனி கட்டணம் வசூலிக்கும் இளம் ஹீரோயின்கள்
  • கவர்ச்சிப் படங்களை பதிவேற்றி பணம் சம்பாதிக்கும் நடிகைகள்
  • காதலனின் அன்பு வளையத்தில் ரெஜி நடிகை
  • காலம் கனிந்தது கதவுகள் திறந்தது!
  • பட வாய்ப்பு குறைவு : துப்பறியும் பணியில் ஹன்ஸ், சைகல் நடிகைகள்
  • நாளொருமேனி பொழுதொரு காதல்
  • 5 முதல் 6 சி வரை சிங்கிள் பேமன்ட்டாக கேட்கும் தாரா நடிகை
  • உஷ்ஷ்!

விமர்சனங்கள்

  • அலிடா : பேட்டில் ஏஞ்சல்
  • தில்லுக்கு துட்டு 2
  • மேரி, குயின் ஆஃப் ஸ்காட்ஸ்
  • சர்வம் தாளமயம்
  • எஸ்கேப் ரூம்
  • வந்தா ராஜாவாதான் வருவேன்
  • பேரன்பு
  • சார்லி சாப்ளின் 2
  • விஸ்வாசம் - விமர்சனம்

தினசரி பதிப்பு :

தமிழகம்அரசியல்விளையாட்டுவர்த்தகம்இந்தியாமாவட்டம்குற்றம்படங்கள்நிகழ்படம்சினிமாஜோதிடம்

வாரம் பதிப்பு : 

ஆன்மிக மலர்வெள்ளி மலர்வசந்தம்கல்விவேலைவாய்ப்புதொழில்நுட்பம்அறிவியல்ஸ்பெஷல் ஆன்மீகம்குங்குமம்

வாசகர் பதிப்பு :

உலக தமிழர்மகளிர்சமையல்சுற்றுலாமருத்துவம்கிரிக்கெட்
Contact Email Id : dotcom@dinakaran.com | Advertisement Enquiry | Font Help?
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191 Extn:21102
Copyright 2016 All rights reserved to Kal Publications