மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில், ‘தக சய்ய சய்ய’ பாடலுக்கு ரயில் மீது நின்றபடி கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர் மலெய்கா அரோரா. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் படங்களும் தயாரித்திருக்கிறார். கோடை விடுமுறையையொட்டி அமெரிக்க சென்ற மலெய்கா, அங்குள்ள ஷாப்பிங் மாலில் பொருட்கள் வாங்க சென்று பல்வேறு மேக்அப் சாதனங்கள் வாங்கினார். ஹாலிவுட் நடிகைகள் எம்மா ஸ்டோன், லெனா ஹெட்லே போன்றவர்களுக்கு மேக் அப் உமனாக பணியாற்றும் ரேச்செல் குட்வினும் பொருட்கள் வாங்க அதே மாலுக்கு வந்திருந்தார். அவரை மலெய்கா சந்தித்தார். இருவரும் காபி ஷாப் சென்று அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சில மேக் அப் டிப்ஸை மலெய்காவிற்கு சொன்னார் ரேச்சல். பின்னர் கடற்கரைக்கு சென்ற மலெய்கா, அங்கு பிரபல யோகா மாஸ்டர் ஒருவரின் தலைமையில் நடந்த யோகா பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயிற்சி செய்து பழகினார். மும்பை திரும்பிய பிறகு தொடர்ந்து மலெய்கா யோகா பயிற்சிகள் செய்யவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.