கார்த்தி, சத்யராஜ், சூரி, சாயிஷா சைகல், பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு நடித்துள்ள படம், கடைக்குட்டி சிங்கம். நாளை ரிலீசாகும் படம் குறித்து கார்த்தி கூறியதாவது: கூட்டுக்குடும்பம் மற்றும் விவசாயத்தின் வலிமை பற்றி படம் பேசுகிறது. இயக்குனர்கள் பலருக்கு கூட்டுக்குடும்பங்கள் பற்றி தெரியவில்லை. அதனால்தான் அத்தகைய கதைகள் இப்போது வருவதில்லை. இது அரசியல் கதையா என்கிறார்கள். இல்லை, அரசியலும் இருக்கும். கிராமத்தில் இருந்து சிட்டிக்கு போனவர்களை, மீண்டும் சிட்டியில் இருந்து கிராமத்துக்கு வரவழைத்து, விவசாயம் பார்க்க தூண்டும் கதை. உலகிற்கே சாப்பாடு போடுபவன், விவசாயி. அவனை யாரும் பரிதாபமாக பார்க்காதீர்கள். அவனுக்குரிய கவுரவத்தை கொடுங்கள் என்று படத்தில் கேட்டிருக்கிறோம். குணசிங்கம் என்ற கேரக்டரில் நானும், என் அப்பாவாக சத்யராஜும் நடித்துள்ளோம். தமிழை தொடர்ந்து தெலுங்கில் சின்ன பாபு என்ற பெயரில் படம் டப்பிங் ஆகிறது. இவ்வாறு கார்த்தி கூறினார். சூரி, இயக்குனர் பாண்டிராஜ் உடனிருந்தனர்.