அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் தம்பதி இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக மணிரத்னம் இயக்கிய ராவண் இந்தி படத்தில் 2010ல் நடித்தனர். இப்போது 8 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் ஜோடியாக குலாப்ஜாமூன் என்ற படத்தில் நடிக்க உள்ளனர். ரொமான்டிக் திரில்லரான இந்த படத்தை அனுராக் கஷ்யப் இயக்குகிறார். இது குறித்து ஐஸ்வர்யா கூறும்போது, ‘படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டேன். இதைவைத்து, அபிஷேக் நடிப்பதால் இதில் நடிப்பதாக சொல்வது தவறு. இந்த பட கதை பிடித்ததால் நடிக்கிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்றார்.