துருவங்கள் 16 படத்துக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம், நரகாசூரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஆத்மிகா நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தயாரித்தார். ஆனால், திடீரென்று தயாரிப்பாளர் மாறியுள்ளார். இதுகுறித்து கார்த்திக் நரேன் கூறியதாவது: துருவங்கள் 16 படம் வெளியானபோது, கவுதம் மேனன் என்னிடம் பேசினார். பிறகு நரகாசூரன் படத்தை நான் இயக்க, அவர் தயாரிக்க முடிவானது. சில நாட்கள் ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அவருக்கு இருந்த பொருளாதார பிரச்னை காரணமாக, மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. இதனால், ஷூட்டிங் முழுமையாக முடிந்து, படம் வெளியாகுமா என்ற கவலை ஏற்பட்டது. நாம் அளவுக்கதிகமாக நம்பிக்கை வைத்தவர்கள் தவறு செய்தால் அதிக கோபம் வரும். அதுபோல் எனக்கும் கோபம் வந்தது. அவரும் பதில் சொன்னார். அந்த பிரச்னை தயாரிப்பாளர் சங்கத்தில் பரிசீலனையில் இருப்பதால், மேற்கொண்டு அதுபற்றி பேச முடியாது. இப்போது பத்ரி கஸ்தூரி தயாரிக்கிறார். அவர் மட்டும் இல்லாவிட்டால் படம் நிறைவடைந்து இருக்காது.