• முகப்பு

    ✤

  • கோலிவுட்

    ✤

    • கோலிவுட் செய்திகள்

    • கோலிவுட் கிசு கிசு

    • சீக்ரெட் சரோஜா

    • கோடம்பாக்கம் கோடங்கி

    • நேர் காணல்

  • பாலிவுட்

    ✤

    • பாலிவுட் செய்திகள்

    • நடிகர்கள் கேலரி

    • நடிகைகள் கேலரி

    • பாலிவுட் மூவி கேலரி

  • ஹாலிவுட்

    ✤

    • ஹாலிவுட் செய்திகள்

    • நடிகர்கள் கேலரி

    • நடிகைகள் கேலரி

    • ஹாலிவுட் மூவி கேலரி

  • ‌சினி கேலரி

    ✤

    • கோலிவுட் மூவி கேலரி

    • நடிகர்கள் கேலரி

    • நடிகைகள் கேலரி

    • நட்சத்திர திருமணங்கள்

    • ஆடியோ வெளியீடு

    • சூட்டிங் ஸ்பாட்

    • மற்றவை

  • டோலிவுட்

    ✤

    • நடிகர்கள் கேலரி

    • நடிகைகள் கேலரி

    • டோலிவுட் மூவி கேலரி

  • வீடியோ

    ✤

    • ஸ்பெஷல்

    • ‌ட்ரெ‌ய்ல‌ர்

  • விமர்சனம்

    ✤

  • கவர்ச்சி

    ✤

  • மாடல்ஸ்

    ✤

  • RSS

    ✤

முகப்பு➛கோலிவுட்➛செய்திகள்➛

நான் காமெடி நடிகையா? சீறுகிறார் நந்திதா!

நான் காமெடி நடிகையா? சீறுகிறார் நந்திதா!
8/24/2018 12:44:56 PM

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர், நந்திதா ஸ்வேதா. கடந்த ஆறாண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மும்மொழிகளிலும் ரவுண்டு கட்டி அடிக்கிறார். இப்போது கூடுதலாக பாலிவுட் என்ட்ரியும் கொடுத்திருக்கிறார். பத்து படங்களுக்கு மேலாக கைவசம் வைத்திருக்கும் பிஸி ஆர்ட்டிஸ்ட். ‘அட்டகத்தி’ படத்தில் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் தாவணி, சுடிதார் என்று தோற்றமளித்த அவர், இப்போது மார்டன் டிரெஸ்சில், விதவிதமான போஸ்கள் கொடுத்து, ஸ்டைலான ஆர்ட்டிஸ்ட்டாக கலக்குகிறார். “எப்படிங்க இப்படி ஆளே மாறிட்டீங்க” என்று கேட்டால், தெற்றுப்பல் தெரிய கலகலவென்று சிரிக்கிறார்.

“உண்மைதாங்க. ‘அட்டகத்தி’ படத்தை நான் இப்ப பார்த்தாலும், எனக்கே என்னை சரியா அடையாளம் ெதரியல. அப்ப எனக்கு டிரெஸ் மேலயோ, மேக்கப் மேலயோ பெரிய இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை. இப்ப எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். படங்கள் அதிகமா வரவும், ஸ்கிரீன்ல என்னை பார்க்க எனக்கே பிடிக்கலை. ஸோ, ரசிகர்களுக்கு போரடிக்கிறதுக்கு முன்னாடி, நாமே நம்மளை சேஞ்ச் பண்ணிக்கிட்டா நல்லதுன்னு நினைச்சேன். இப்ப தடால்னு என் ஸ்டைலை மாத்திக்கிட்டேன்.”

“உங்களோட ‘அட்டகத்தி’ படத்துல அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், ‘காக்கா முட்டை’, ‘வடசென்னை’ன்னு வேற லெவலுக்கு போயிட்டாங்க. ஆனா, அவரோட வேகம் உங்ககிட்ட இல்லையே...?”

“அவங்ககிட்ட இருக்கிற திறமைக்கு, இந்த உயரமே ரொம்ப குறைவு என்பதுதான் என் கருத்து. என் நெருங்கிய தோழிதான்
ஐஸ்வர்யா. அவருக்கு அந்த மாதிரி கதைகள் கிடைக்குது. அதுல அவர் திறமை காட்டி நடிக்கிறார். சினிமாவுல வேகமா ஓடிக்கிட்டு இருக்கார். எனக்கு எந்த மாதிரி கேரக்டர் வருதோ அதை நான் செய்யறேன். அவரை பார்த்து எப்பவுமே நான் பொறாமைப்பட மாட்டேன். பெருமைதான் படுவேன்.”
“நீங்க தொடர்ச்சியா ‘முண்டாசுப்பட்டி’, ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, இப்படி நிறைய காமெடி படங்களில்தான் நடிக்கறீங்க. இதையே தொடர்ச்சியா பண்ணா, உங்களை காமெடி ஹீரோயின்னு முத்திரை குத்திட மாட்டாங்களா?”

“செல்வராகவன் டைரக்‌ஷன்ல நடிச்ச ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வந்திருந்தா, இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீங்க. அந்த கேரக்டர் பற்றி இப்ப நான் விரிவா சொல்ல முடியாது. படம் வர்றப்ப பாருங்க புரியும். ‘நர்மதா’ன்னு ஒரு படம் நடிச்சிருக்கேன். ஒரு சின்ன பொண்ணு கர்ப்பமானா, அவளோட வேதனை எப்படி இருக்கும்னு சொல்ற கதை இது. ஹீரோன்னு யாரும் கிடையாது. கீதான்னு முதன்முதலா ஒரு லேடி டைரக்டர் கூட ஒர்க் பண்றேன். அவர், பாலா சார் கிட்ட அசிஸ்டென்டா இருந்தவர். அந்த படத்தை பார்த்தா, எனக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொல்வீங்க. நான் நிறைய காமெடி படங்கள்ல நடிச்சிருக்கேன்னு சொல்றது உண்மைதான். ஆனா, நான் முழுநேர காமெடி நடிகை கிடையாது. ஜனங்க இப்ப காமெடி படங்களைதான் அதிகமா ரசிக்கிறாங்க. அதனாலதான் நிறைய காமெடி படங்கள் வருது. மக்களை சந்தோஷப்படுத்தும் வாய்ப்பு காமெடி படங்கள்லதான் கிடைக்கும். எனக்கும் காமெடி ரொம்ப, ரொம்ப பிடிக்கும். காமெடி படத்துல நடிக்கிறப்ப, எல்லா கவலையையும் மறந்து ஜாலியா இருப்பேன்.”

“செல்வராகவன் டைரக்‌ஷன்ல நடிச்ச அனுபவத்தை பற்றி சொல்லுங்க..?”

“அவர் டைரக்‌ஷன்ல ஒர்க் பண்ண அனுபவம், ஸ்கூல் லைஃப் மாதிரி இருந்தது. நடிப்பு சம்பந்தமா நிறைய புது விஷயங்கள் கத்துக்கிட்டேன். அவர் சொல்லிக் கொடுத்த நடிப்பு ஸ்டைல் வேற லெவல்ல இருந்தது. அதாவது, இங்கிலீஷ் படத்துல நடிச்ச மாதிரி இருந்தது. படம் ரிலீசாக லேட்டாகிட்டு இருக்கிறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் எப்ப ரிலீசானாலும், ஆடியன்சுக்கு புதுசா தெரியற கதையா
இருக்கும்.”
“டைரக்டர் ரஞ்சித், தன் படத்துல நடிச்சவங்களை அடுத்தடுத்த படத்துக்கு கொண்டு போறார். ஆனா, உங்களை மட்டும் அம்போன்னு விட்டுட்டாரே?”
“என்னை தமிழ்ல அறிமுகப்படுத்திய டைரக்டர் என்பதால், ரஞ்சித் மேல எனக்கு கூடுதல் மரியாதை உண்டு. தன்னோட கதையில, இந்த கேரக்டர்ல நந்திதா நடிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சுன்னா, கண்டிப்பா அவர் படத்துல நடிக்க என்னை கூப்பிடுவார். ‘அட்டகத்தி’ படத்துக்கு பிறகு வந்த அவரோட எல்லாப் படத்தையும் நான் பார்த்துட்டேன். அதுல எல்லாம் நான் நடிக்கிற மாதிரி எந்த கேரக்டரும் இல்லை. குறிப்பா, ‘கபாலி’ படத்துல தன்ஷிகா கேரக்டர்ல அவர் நடிச்சதாலதான் நல்லா இருந்தது. நான் நடிச்சிருந்தேன்னா அந்தளவுக்கு இருந்திருக்காது.”

“இப்ப தெலுங்குல ரொம்ப பிசியா இருக்கீங்க போல...?”

“தெலுங்குல என் முதல் படம் ‘எக்கடக்கி போத்தாவா சின்னவாடா’, பெரிய ஹிட்டாச்சு. இப்ப ‘சீனிவாசா கல்யாணம்’ ரிலீசாகி நல்லா ஓடிக்கிட்டிருக்கு. இதுல நான் ஆக்‌ஷன் ஹீரோயினா நடிச்சிருக்கேன். அடுத்து, தமிழ்ல வந்த ‘சதுரங்க வேட்டை’ படத்தோட ரீமேக்ல நடிச்சு முடிச்சிருக்கேன். ‘பிரேம கதாசித்ரம்’ ரெண்டாம் பாகத்துலயும் நடிச்சிருக்கேன். இதன் முதல் பாகம்தான், தமிழ்ல ரிலீசான ‘டார்லிங்’ படம்.”

“தமிழ்லே என்னென்ன படம் பண்றீங்க?”

“இப்ப ‘நர்மதா’ படத்தை முடிச்சிருக்கேன். அடுத்து வைபவ் கூட ‘பாணா’ன்னு ஒரு படம் பண்றேன். இது முழுநீள காமெடி படம். நர்ஸ் டிரெய்னிங் எடுக்கிற பொண்ணா நடிக்கிறேன். வைபவ், யோகி பாபு கூட சேர்ந்து பண்ண காமெடி ரொம்ப சூப்பரா வந்திருக்கு. ‘வணங்காமுடி’ படம் இறுதிக்கட்டத்துல இருக்கு. இதுல நான் முதன்முறையா போலீஸ் கேரக்டர் பண்றேன். தமிழ், தெலுங்குல தயாராகும் ‘செவன்’ படமும் இருக்கு.”

“அறிமுகமான கன்னடத்துல நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-என்ட்ரி ஆகியிருக்கீங்களே..?”

“என்னை நடிகையா அறிமுகப்படுத்தியது கன்னட படவுலகம்தான். ஆனா, நிறைய புதுப்பட வாய்ப்புகள் கொடுத்தது தமிழ் படவுலகம். இங்கே ரிலீசான ‘களவாணி’ படம், கன்னடத்துல ‘கிராதகா’ என்ற பெயரில் ரீமேக் ஆச்சு. இப்ப அதனோட ரெண்டாம் பாகத்துல நடிக்கிறேன். தமிழ்ல உருவாகிற ரெண்டாம் பாகத்தோட கதை வேறு, இந்தப் படத்தோட கதை வேறு. தவிர, வேற சில படங்கள்ல நடிக்கவும் கேட்டுக்கிட்டு இருக்காங்க. கால்ஷீட் பிரச்னை வந்துடக்கூடாதுன்னு, ரொம்ப கேர்ஃபுல்லா படங்கள் கமிட் பண்ணி நடிக்கிறேன். நான் எந்த மொழிப் படத்துல நடிச்சாலும், தமிழ் படங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் தருவேன். எனக்கு பொருத்தமான நல்ல சப்ஜெக்ட் கிடைச்சா, கன்னடத்துல தொடர்ந்து
நடிப்பேன்.”

“நந்திதா பெயர்ல, திடீர்னு ஸ்வேதா ஒட்டிக்கிட்டது ஏன்?”

“என் ஒரிஜினல் பெயர், ஸ்வேதா. கன்னடத்துல அறிமுகமான படத்தின் பெயர், நந்தா லவ்ஸ் நந்திதா. உடனே டைரக்டர், எனக்கு ‘நந்திதா’ன்னு பெயர் வைத்தார். பிறகு அந்த படத்துல வர்ற என் கேரக்டருக்கும் அந்த பெயரையே வைத்தார். கன்னடத்துல இருந்து தமிழுக்கு வந்திருக்கேன். ‘ஸ்வேதா’ங்கிற பெயர்ல இருக்கிற இன்னசென்ட் எனக்கு பிடிக்கும். அதனால, நந்திதா பெயருக்கு பின்னாடி ஸ்வேதா சேர்த்துக்கிட்டேன். என்னை ‘நந்திதா’ன்னு கூப்பிட்டா, ஒரு நடிகையா மட்டுமே ஃபீல் பண்றேன். ரெண்டு பெயரையும் சேர்த்து கூப்பிடறப்பதான், என்னை நானா உணர்றேன். புரொபஷனலாவும், பெர்சனலாவும் இப்படி கூப்பிடறதுதான் பிடிச்சிருக்கு.”

“காதலை பற்றியும், கல்யாணத்தை பற்றியும் சொல்லுங்க..?”

“காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்ப கல்யாணம் பண்ணாலும், காதல் கல்யாணம்தான் பண்ணுவேன். எப்ப வேலையில்லாம சும்மா இருக்கேனோ, அப்ப காதலிக்கிறதா முடிவு பண்ணியிருக்கேன். இப்ப நான் நடிப்புல ரொம்ப பிசி. அதனால, காதலை கொஞ்சம் தள்ளி வெச்சிருக்கேன்.”

Tags:
நந்திதா
Movie Gallery
  • நாடோடிகள் 2

    நாடோடிகள் 2
  • காதல் முன்னேற்ற கழகம்

    காதல் முன்னேற்ற கழகம்
  • வந்தா ராஜாவாதான் வருவேன்

    வந்தா ராஜாவாதான் வருவேன்
  • தேவ்

    தேவ்
-----

டிரெய்லர்கள்

  • என்.ஜி.கே.
  • இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
  • அலாவுதீனின் அற்புத கேமரா
  • 90 எம்.எல்.
  • அயோக்யா
  • நீயா 2
  • கண்ணே கலைமானே
  • வர்மா
  • யாத்ரா

கிசு கிசு

  • திருமணத்துக்கு தயாரான சர்வமான நடிகர்
  • கடை திறப்புக்கு தனி கட்டணம் வசூலிக்கும் இளம் ஹீரோயின்கள்
  • கவர்ச்சிப் படங்களை பதிவேற்றி பணம் சம்பாதிக்கும் நடிகைகள்
  • காதலனின் அன்பு வளையத்தில் ரெஜி நடிகை
  • காலம் கனிந்தது கதவுகள் திறந்தது!
  • பட வாய்ப்பு குறைவு : துப்பறியும் பணியில் ஹன்ஸ், சைகல் நடிகைகள்
  • நாளொருமேனி பொழுதொரு காதல்
  • 5 முதல் 6 சி வரை சிங்கிள் பேமன்ட்டாக கேட்கும் தாரா நடிகை
  • உஷ்ஷ்!

விமர்சனங்கள்

  • அலிடா : பேட்டில் ஏஞ்சல்
  • தில்லுக்கு துட்டு 2
  • மேரி, குயின் ஆஃப் ஸ்காட்ஸ்
  • சர்வம் தாளமயம்
  • எஸ்கேப் ரூம்
  • வந்தா ராஜாவாதான் வருவேன்
  • பேரன்பு
  • சார்லி சாப்ளின் 2
  • விஸ்வாசம் - விமர்சனம்

தினசரி பதிப்பு :

தமிழகம்அரசியல்விளையாட்டுவர்த்தகம்இந்தியாமாவட்டம்குற்றம்படங்கள்நிகழ்படம்சினிமாஜோதிடம்

வாரம் பதிப்பு : 

ஆன்மிக மலர்வெள்ளி மலர்வசந்தம்கல்விவேலைவாய்ப்புதொழில்நுட்பம்அறிவியல்ஸ்பெஷல் ஆன்மீகம்குங்குமம்

வாசகர் பதிப்பு :

உலக தமிழர்மகளிர்சமையல்சுற்றுலாமருத்துவம்கிரிக்கெட்
Contact Email Id : dotcom@dinakaran.com | Advertisement Enquiry | Font Help?
No.229 KutcheryRoad, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191 Extn:21102
Copyright 2016 All rights reserved to Kal Publications