நடிகைகளில் அனுஷ்கா ரூ 3 கோடி சம்பளம் பெற்றதாக கூறுவதுண்டு. மற்ற ஹீரோயின்கள் யாருக்கும் அவ்வளவு பெரிய சம்பளம் தரப்பட்டதில்லை. பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடிக்க பல்வேறு ஹீரோயின்களிடம் பேச்சு நடந்தது. குறிப்பாக பாலிவுட் ஹீரோயினை நடிக்க வைக்க எண்ணினர். கேத்ரினா கைப், தீபிகா படுகோன் போன்ற சில நடிகைகளிடம் நடிக்க கேட்டபோது கால்ஷீட் இல்லை என்று கைவிரித்தனர். இந்நிலையில்தான் ஷ்ரத்தா கபூர் நடிக்க முன்வந்தார். ஆனால் அதிக சம்பளம் கேட்டதால் அவரை நடிக்க வைப்பதில் நீண்ட பேச்சு வார்த்தை நடந்தது. இறுதியில் பெரிய தொகை சம்பளமாக தர ஒப்புக்கொண்ட பிறகே நடிக்க சம்மதித்தார். ஷ்ரத்தாவுக்கு ரூ 3 கோடி சம்பளம் தரப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. இதுவரை கோலிவுட் ஹீரோயின்கள் யாருக்கும் இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக தரப்பட்டதில்லை. சம்பளத்துக்கு ஏற்ப அவரிடம் வேலையும் வாங்கியிருக்கிறார்களாம். ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டும் என்று பட தரப்பில் கேட்டுக்கொண்டபோது ஷ்ரத்தா சம்மதித்தார். அதில் திருப்தி அடைந்த படதரப்பு அவர் கேட்ட சம்பளம் தர முடிவு செய்தது. இப்படத்துக்காக ஹீரோ பிரபாஸ் நடித்துள்ள ஆக்ஷன் காட்சிகளில் ஷ்ரத்தாவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறாராம்.