‘யாவரும் நலம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நீது சந்திரா. தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், சிங்கம் 3, வைகை எக்ஸ்பிரஸ், பிரம்மா டாட் காம் போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். சுமார் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நீது சந்திரா, மார்ஷல் கலையில் தேர்ச்சியாகி 2 பிளாக் பெல்ட் பெற்றிருக்கிறார். தனது ஆக்ஷன் திறமையை ஆதிபகவன் படத்தில் பயன்படுத்தி ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஹீரோயின்கள் ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலே நடிப்பில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற மனோபாவத்துக்கு வந்துவிடுகின்றனர். சில நடிகைகள் ஒவ்வொரு படத்திலும் நடிப்பு கற்றுவருவதாக கூறுகின்றனர். நடிகை நீது சந்திரா தனது நடிப்பை இன்னமும் பட்டை தீட்டும் நோக்கத்துடன் பிரத்யேக பயிற்சியாளரிடம் நடிப்பு பயிற்சி பெற முடிவு செய்தார். ஹாலிவுட் நடிப்பு பயிற்சியாளர் டாம் டிரபரிடம் அவர் மாணவியாக சேர்ந்திருக்கிறார். தினமும் அவரிடம் நடிப்பின் நுணுக்கங்களை கற்று வருகிறார். இதுபற்றி தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் நீது,’டாம் டிரபரிடம் நடிப்பு பயிற்சி பெற்றுவருகிறேன். அதன் மூலம் பாசிடிவ் உணர்வுகள் ஏற்பட்டிருக்கிறது. தன்னம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.