மாடல் அழகிகள் பலர் திரைப்பட நடிகைகள் ஆகியிருக்கின்றனர். உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்தவர் சாஷா செட்ரி. இவர் செல்போன் விளம்பரம் ஒன்றில் அடிக்கடி வந்து செல்பவர். தற்போது அவரை திரைப்பட நடிகையாக்க இயக்குனர்கள் சிலர் வலை விரித்தனர். அந்த வலையில் அவர் சிக்கியிருக்கிறார். டோலிவுட் இயக்குனர் சாய் கிரண் அத்வானி இயக்கும் ‘ஆப்ரேஷன் கோல்டு பிஷ்’ படம் மூலம் சாஷா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஐதராபாத்தில் நடக்கும் அப்படத்தின் படப்பிடிப்பில் சாஷா நடித்து வருகிறார். நடிகையாக சாஷா அறிமுகம்பற்றி அறிந்த பிரபாஸ் நடிக்கும் சாஹோ பட இயக்குனர் சுஜீத் தான் இயக்கும் படத்திலும் அவரை நடிக்க வைக்க எண்ணினார். ஆப்ரேஷன் கோல்டு பிஷ் படத்தில் சாஷாவின் நடிப்பு திறமை பற்றி அப்பட குழுவினரிடம் விசாரித்த போது அவர்கள் அவரது நடிப்பை பாராட்டினார்கள். இதையடுத்து சாஹோ படத்தில் நடிக்க சாஷாவுக்கு வாய்ப்பளித்திருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. சாஹோ படத்தில் ஏற்கனவே ஹீரோ பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.