‘பரியேறும் பெருமாள்’ எப்படி?பொதுவாக நம் படைப்பாளிகளுக்கு சமூகக் கோபம் உண்டு. சமுதாயப் பிரச்சினைகளை ஹைலைட் செய்து படமெடுப்பது வழக்கம். பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கிறது என்று நம்புகிற படைப்பாளியாக மாரிசெல்வராஜ் இருக்கிறார். அவருடைய இந்தத் தன்மையே ‘பரியேறும் பெருமாள்’ படத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. தன்னை வீழ்த்த முயன்றவர்களை பழிவாங்க ‘பரியேறும் பெருமாள்’ கத்தி தூக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலமாக தனக்குரிய இடத்தை பெறமுடியும் என்று கருதுகிறான். இதனாலேயே வழக்கமான காதல் கதை, முக்கியமான ஒரு படமாக உருவெடுத்திருக்கிறது.விக்ராந்த் என்ன ஆனார்?இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். கடந்த 13 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15 படங்கள் நடித்துவிட்டார். ஆக்ஷன் ஹீரோவுக்குரிய பாடிலேங்குவேஜ் கொண்டவர். நன்கு நடிக்கவும் செய்கிறார். உறவுமுறையில் விஜய்யின் தம்பி. இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘வெண்ணிலா கபடிகுழு-2’, ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ ஆகியவை அவருக்கு பிரேக் ஆக அமைய வாழ்த்துவோம்.நான் அரசியலுக்குப் பொருந்தமாட்டேன் என்கிறார் ஸ்ரேயா?அவரை யாராவது அரசியலுக்கு அழைத்தார்களா என்ன?சினிமா கிசுகிசு சொல்லி ரொம்ப நாளாச்சே?பெரிய இடத்து மருமகன் பெரும் கடன் தொல்லையால் அவதிப்படுகிறாராம். கடன் தொகை 100-சியை நெருங்குகிறது என்று கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.தன்னை யாரும் காதலிக்கவில்லை என்று மகிமா நம்பியார் கவலை தெரிவித்திருக்கிறாரே?இதென்ன அநியாயம்? மகிமாவின் மகிமை அவருக்கே தெரியவில்லை. ‘காதலிக்க ரெடி’ என்றொரு ஸ்டேட்மென்ட் விடுக்கச் சொல்லுங்கள். நம்மூர் இளவட்டங்கள் ரோஜாப்பூவோடு நீண்ட கியூவில் நிற்பார்கள்.