ஹீரோக்களுடன் டூயட் பாடும் நாயகியாக வலம் வந்துக்கொண்டிருந்த அமலாபால் சமீபகாலமாக மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கிறார். ‘ஆடை’ படத்தில் முக்கால் நிர்வாணமாக நடித்திருக்கிறார். இந்த புகைப்படம் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இனிவரும் படங்களிலும் முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடிக்கவே விரும்புவதாகவும் எதிர்காலத்தில் அரசியலில் குதிக்கும் எண்ணமும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். கடந்த மாதம் கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகளை நேரில் சென்று வழங்கினார். அப்போது பல பெண்கள் அவரிடம் உதவி கேட்டனர். இதையடுத்து சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு புதிய பிஸ்னஸ் தொடங்கி அதில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி முடிவு செய்திருக்கிறார். இயற்கை முறையிலான சத்துள்ள உணவு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க எண்ணி உள்ளார். இதில் போட்டியாளர்கள் குறைவு என்பதால் தன்னால் வெற்றிகரமாக இந்த பிஸ்னஸை நடத்த முடியும் என்கிறார் அமலாபால்.