சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் பாராட்டப்படுபவர் ஹன்சிகா. உடல் வெயிட்போட்டிருந்த நிலையில் தற்போது எடை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். சமீபத்தில் அவர் நீச்சல் உடையில் நிற்பதுபோன்ற புகைப்படங்கள் நெட்டில் லீக் ஆனது. ஹன்சிகாவின் செல்போனை ஹேக் செய்து இப்படங்களை யாரோ வெளியிட்டதாக அவரது தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இப்படங்களை ஹன்சிகாவே பப்ளிசிட்டிக்காக வெளியிட்டதாக சிலர் அவரைபற்றி கலாய்த்து வருகின்றனர். இது ஹன்சிகாவின் மனதை காயப்படுத்தி உள்ளது.இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது: கடந்த சில வாரங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது என் செல்போனில் பிரச்னை ஏற்பட்டது. அதன் பிறகுதான் என் அந்தரங்க புகைப்படங்கள் கசிந்துள்ளன. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் அவை. அதை யாரோ செல்போனை ஹேக் செய்து கசிய விட்டுள்ளனர். விளம்பரம் தேட நானே என் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதாக சிலர் கூறுவது வேதனையாக உள்ளதுடன், சிலர் தெரிவித்துள்ள கருத்துகள் என்னை காயப்படுத்தி உள்ளது. என் செல்போன், டுவிட்டரை ஹேக் செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.