பாக்மதி படத்துக்கு பிறகு புதிய படங்கள் ஒப்புக்ெகாள்ளாமல் உடல் மெலிவதற்கான சிகிச்சையில் கவனம் செலுத்தி வந்தார் அனுஷ்கா. சுமார் ஒரு வருட காலம் தீவிரமாக முயன்றதுடன், வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று உடல் எடையை குறைத்தார். அதன்பிறகு அவர் ஐதராபாத் திரும்பினார். அவரது புதிய தோற்றத்தை கண்டவர்கள், முன்பிருந்ததைவிட தற்போது ஓரளவுக்கு உடல் மெலிந்திருக்கிறார், ஒரேயடியாக உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சான் தோற்றத்துக்கு மாறிவிடவில்லை என்றும் கூறி வருகின்றனர். தன்னை பற்றிய திருமண கிசுகிசு, உடல் எடை பிரச்னை என எதைபற்றியும் கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வரும் அனுஷ்கா அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.சிரஞ்சீவி தற்போது தெலுங்கில் சே ரா நரசிம்மரெட்டி படத்தில் நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அமிதாப்பச்சன், நயன்தாரா, தமன்னா நடிக்கின்றனர். இதற்கிடையில் மற்றொரு சர்ப்ரைஸ் தரும் எண்ணத்தில் அனுஷ்காவுக்காக ஸ்பெஷல் கேரக்டர் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனையும் இயக்குனரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விஜயகாந்த் நடித்த ரமணா தமிழ் படம் தெலுங்கில் ஸ்டாலின் பெயரில் ரீமேக் ஆனபோது சிரஞ்சீவி நடித்திருந்தார். அப்படத்தில் அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடித்தார். ஆனால் காதல் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. அந்த வாய்ப்பை சே ரா படத்தில் தருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக பட தரப்பு கூறுகிறது.