நீ ஒல்லியானால் நல்லா இருக்காது, நான் குண்டானால் நல்லா இருக்காது என்று ஒரு படத்தில் பிரபுவை பார்த்து டயலாக் பேசுவார் ரஜினிகாந்த். அதுபோல் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானதிலிருந்தே சற்று உடற்பூசினாற்போன்றே நடித்து வந்தார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி வேடம் ஏற்றதற்காக மேலும் வெயிட் போட்டாலும் கீர்த்தி நடித்த படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டாகவே அமைந்தன. அதே தோற்றத்துடன் விஜய்யுடன் சர்கார் படத்திலும் நடித்தார். அதுவும் வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு பிறகு புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தார் கீர்த்தி. ரஜினிகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாக கூறப்படும் புதிய படத்திலும், ராஜமவுலி இயக்கும் சரித்திர படத்திலும் கீர்த்தி நடிக்க பேச்சு நடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதை உறுதி செய்யாமலிருக்கும் கீர்த்தி, திடீரென்று கடுமையான உடற் பயிற்சி, உணவு கட்டுப்பாடு கடைபிடித்து உடலை மெலியச்செய்தவதற்கான வேலை களில் தீவிரம் காட்டி வருகிறார். அது பலன் அளித்திருக்கிறது. உடல் மெலிந்த புதிய தோற்றத்தில் கீர்த்தியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதைக் கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியிருக்கின்றனர். நீங்க ஒல்லியானா நல்லா இருக்காது என்று சில ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்திருக்கின்றனர். ராஜமவுலியின் சரித்திர படத்தில் நடிக்கவிருப்பதாலேயே வெயிட்டை குறைத்து ஒல்லிபிச்சான் தோற்றத்துக்கு கீர்த்தி மாறிவருவதாகவும் தெரிகிறது.