பெண் தாதாவாக நடிக்கிறார் ராணி
3/4/2013 12:04:54 PM
சரிகம இண்டியா நிறுவனம் தயாரித்து வரும் தொலைக்காட்சித் தொடர் ‘வள்ளி’. சன் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கிராமத்தைச் சேர்ந்த வள்ளி, தனக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து வைக்க முயன்றதால் அங்கிருந்து தப்பி நகரத்துக்கு வருகிறார். இங்கு வள்ளி சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. வள்ளியை விபச்சார கும்பல் ஒன்று துரத்தும்போது அவளை காப்பாற்றுகிறாள் இந்திரசேனா. அவள் சென்னை நகரின் பிரபல தாதா. இந்த கேரக்டரில் ராணி நடிக்கிறார். இவர் ‘அத்திப்பூக்கள்‘ தொடரில் வில்லியாக நடித்தவர். இத்தொடரில் ராம்ஜி, உமா, இந்திரஜா, வி.எஸ்.ராகவன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.