Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
Dracula Hunt

டிராகுலா வேட்டை

3/9/2013 12:35:09 AM

ஹாலிவுட் பேய் டிராகுலாவும், தமிழ்நாட்டு மந்திரசக்தியும் மோதும் படம். ருமேனியா நாட்டுக்கு இளம் மனைவியுடன் தேனிலவுக்குச் செல்கிறார் சுதிர். அவர் மந்திரசக்தி ஆய்வாளர். அங்கு டிராகுலா வசித்த ஓர் அரண்மணை சுற்றுலாத்தலமாக உள்ளது. அதை பார்க்கும் சுதிர், நம் நாட்டு மந்திரசக்தியை கொண்டு டிராகுலாவை சந்திக்க முடியுமா என்று பரிசோதிக்கிறார்.

அந்த சோதனை விபரீதத்தில் முடிகிறது. மந்திரத்தில் உயிர்பெறும் டிராகுலா சுதிரின் உடம்புக்குள் புகுந்து கொள்கிறது. அந்த டிராகுலாவின் காதலி, தமிழ்நாட்டில் உள்ள மாந்திரீகர் நாசர் மகளாக (மோனல் கஜ்ஜார்) மறுஜென்மம் எடுத்துள்ளார். தன் காதலியை மீட்டுச் செல்ல, டிராகுலா சுதிரின் வடிவத்தில் இந்தியா வருகிறது. ஜெயிப்பது டிராகுலாவா? இந்திய மந்திர சக்தியா என்பது மீதி கதை.

கதை ருமேனியா நாட்டின் டிராகுலா அரண்மனையில் தொடங்கும்போது ஹாலிவுட் தரத்தில் ஒரு படம் என்று நினைக்கத் தோன்றுகிறது. டிராகுலா அரண்மனையில் சுதிர் நடத்தும் பூஜை, டிராகுலா சுதிரை கடித்து குதறி அவர் உடலுக்குள் புகுந்து கொள்வது, அவரது மனைவியின் கழுத்தை கடித்து  அடிமையாக்குவது என திகிலாக நகரும் கதை, டிராகுலா இந்தியாவுக்கு வந்ததும், வழக்கமான ஜீபூம்பா கதையாகி விடுகிறது.

மந்திர தந்திரங்களில் தேர்ந்த நாசர், தன் மகள்கள் டிராகுலாக்களால் துன்பப்படும்போது வெளியூர் போய்விடுகிறார். திரும்பி வந்து வீரம் பேசுகிறார். நாசர் தன் சக்தியை கொண்டு டிராகுலாவை அழிக்கப் போகிறார் என்று பார்த்தால், ஹீரோ ஆர்யன் கையில் ஒரு தாயத்தை கட்டி சண்டைக்கு அனுப்புகிறார். அவர் டிராகுலாவோடு சண்டைபோட்டு வெல்கிறார். பிரபு, மேல்நாட்டு டிராகுலா ஆராய்ச்சியாளராக வந்து டிராகுலாவை விரட்ட சீரியசாகத் திட்டம் போடுகிறார். எல்லாமே காமெடியாகத்தான் இருக்கிறது. இப்படி ஹாலிவுட் பாணியில் ஆரம்பித்து, கோலிவுட் கொத்துபரோட்டாவாக முடித்திருக்கிறார் இயக்குனர்.

படம் 3டி என்பதால் மோனல் கஜ்ஜார், ஷரத்தா தாஸ் அழகை அருகில் இருந்து பார்க்க வைக்கிறார்கள். ஷரத்தா தாஸின் பாம்பு நடனம் 3டி ஸ்பெஷல் கிளாமர். ஹீரோ ஆர்யன், மோனலை காதலித்து ரொமான்ஸ் பண்ணுகிறார். டாக்டர் டிசோசாவாக வந்திருக்கும் டிராகுலாவிடமே வேலை செய்கிறார். கிளைமாக்சில் டிராகுலாவுடன் சண்டைபோடுவதைத் தவிர, வேறு வேலைகள் ஏதும் அவருக்கு இல்லை.

டிராகுலாவாக நடித்திருக் கும் சுதிர், கச்சிதமான தேர்வு, சிக்ஸ்பேக் பாடி, ஆறடி உயரம், நீண்ட தலைமுடி என பயமுறுத்துகிறார். முடியை சிலுப்பி, பற்கள் நீண்டு ரத்தம் குடிக்கும் காட்சிகள் மிரட்டல். அந்த கிராபிக்ஸ் டிராகுலா காமெடி கார்டூன் மாதிரி இருக்கிறது. படம் சீரியசாக பயமுறுத்தினாலும் கொஞ்சம் சிரிக்கவும், 3டியில் கொஞ்சம் ரசிக்கவும் வைக்கிறார்கள். சதீஷ்பாபுவின் ஒளிப்பதிவு இருட்டில் பயமுறுத்துகிறது. பின்னணி இசை திகிலூட்டுகிறது.
, தினகரன் விமர்சனக்குழு.

டிராகுலா வேட்டை
மேலும் கோலிவுட் செய்திகள்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நேரம்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நாகராஜா சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  மூன்று பேர் மூன்று காதல்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  எதிர் நீச்சல்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  சூது கவ்வும்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நான் ராஜாவாக போகிறேன்
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஒருவர் மீது இருவர் சாய்ந்து


pause play
  •   பரிந்துரை
    Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills
    Vaathu Movie Stills Yaan Movie Stills
    Thalaiva Stills Theeya Velai Seiyyanum Kumaru
    Stars At Hira Manik Awards 2013 Thirumathi Thamizh Movie Press Meet
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஆன்மீக பயணம் செல்லும் சிம்பு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  அரசியலில் குதிக்கிறார் நடிகை பிரீத்தி ஜிந்தா
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கிரிக்கெட் சூதாட்டத்தினை மையமாக கொண்ட கதை
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  நடிகர் சஞ்சய் தத்தை புனே சிறைக்கு மாற்றும் முடிவு 1 மாதம் தள்ளிவைப்பு
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பாலிவுட்டில் பிஸியாகும் யாமி
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஹன்சிகாவுக்கு கவர்னர் பாராட்டு