அஜீத் - தமன்னா ஜோடி: ஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பம்
3/14/2013 12:11:42 PM
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள அஜீத்தின் வலை படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மார்ச் இறுதிக்குள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அஜீத் தனது அடுத்த படத்தினை வரும் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளார். அஜீத் ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளார். நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெறுகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.