இயக்குநர் அமீர் மீது கமிஷனரிடம் புகார்
3/16/2013 11:32:54 AM
இந்து மக்கள் கட்சியின் மாநில அலுவலக செயலாளர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
இயக்குநர் அமீர் ஒரு பேட்டியில் தலிபான்கள் என்கிற ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை போராளிகள் என்றும், அவர்களை தவறாக சித்தரித்த விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எதிராக எந்த அமைப்பும் போராடவில்லை என்றும் கூறி இருக்கிறார். விஸ்வரூபம் பட பிரச்னை முடிந்துவிட்ட நிலையில் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமீரின் பேட்டி உள்ளது. அதனால் தமிழக காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.