வருபவரெல்லாம் நிலைக்க முடியாது : இளையராஜா பேட்டி
3/17/2013 4:24:30 PM
சென்னை: ‘திரையுலகுக்கு வருபவரெல்லாம் நிலைக்க முடியாது என்றார் இளையராஜா.ஆதி, சந்தீப், டாப்ஸி, லட்சுமி மன்ச்சு நடித்த படம் ‘மறந்தேன் மன்னித்தேன்Õ. தெலுங்கில் ‘குண்டல்லோ கோதாரிÕ என்ற பெயரில் வெளிவந்தது. இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல் சிடி விற்பனையில் சாதனை படைத்ததையடுத்து நேற்று பிளாட்டினம் டிஸ்க் வெளியிட்டார் இளையராஜா. பிறகு அவர் கூறும்போது,‘1986ம் ஆண்டு ஆந்திராவின் ராஜமுந்திரி பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவம்தான் இப்படத்தின கதையாக உருவாகி உள்ளது. மூணாறு சென்று பாடல் கம்போஸிங்கில் ஈடுபட்டேன். குண்டல்லோ கோதாரி (மனசுக்குள் கோதாவரி) என்று தெலுங்கில் பெயர் வைத்தார்கள். பட தலைப்பை சொன்னவுடன் அதே வார்த்தையுடன் பாடலை தொடங்கி பதிவு செய்தேன். இன்றைய தினம் எல்லாம் எலக்ட்ரானிக் மயமாகிவிட்டது. ஆனால் இந்த படத்துக்கு இசை கலைஞர்களை முழுமையாக பயன்படுத்தினேன். தெலுங்கில் வெளியாகி ஹிட்டாகி இருக்கிறது. தமிழில் வெளியாக உள்ளது. இப்படம் பற்றி நான் பேசுவதைவிட ஜனங்க பேசி கேட்க விரும்புகிறேன். என்றைக்கும் அழியாத விஷயம் என்னிடம் இருக்கிறது. ரசிகர்கள் மாறிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் என்றைக்கும் மாறமாட்டார்கள். நல்லவற்றை ரசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நிறையபேர் வரலாம். அவர்களுக்கு மீடியாக்கள் ஆதரவும் தரலாம். ஆனால் வருபவரெல்லாம் நிலைக்க முடியாதுÕ என்றார்.