மீண்டும் படம் இயக்குகிறார் ஐஸ்வர்யா
3/17/2013 4:31:09 PM
சென்னை: தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கிய அவரது மனைவி ஐஸ்வர்யா, அடுத்த படம் இயக்க தயாராகிவிட்டார். இதற்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர் அந்த பணிகளை முடித்திருக்கிறார். ‘கடல்’ படத்தில் அறிமுகமான கார்த்திக் மகன் கவுதமை இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கும் ஐஸ்வர்யா, சமீபத்தில் அவரை சந்தித்து பேசினார். அப்போது படத்தின் கதையை கூறினார். அதைக்கேட்டு திருப்தி அடைந்த கவுதம் நடிக்க சம்மதித்தார். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தை பிரபல பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. ‘3’ படத்துக்கு இசை அமைத்த அனிரூத் இப்படத்துக்கும் இசை அமைக்க உள்ளார். அடுத்து ஹீரோயினை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.