வில்லங்கத்தில் ஹீரோயின்
3/20/2013 12:59:54 PM
நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...
அட்ட நைப் நந்தி ஹீரோயின கிளாமரா நடிக்கணும்னு கேட்டா பதறுறாராம்... பதறுறாராம்... ‘எம் முகத்த பாத்தீங்களா. ஹோம்லியான பேஸ். நான்போய் கிளாமரா நடிச்சா ஏத்துப்பாங்களா. இதுவர நடிச்ச படத்துல ஹோம்லியாதான் நடிச்சிட்டிருக்கேன். இப்படி நடிச்சாலே போதும்னு முடிவு பண்ணிட்டே‘னு சொல்றாராம். இத கேட்ட சில இயக்குனருங்க காதுபட முணுமுணுக்கறாங்களாம். கவர்ச்சியா நடிக்க மாட்டேனு சொல்றது ஹீரோயினுங்களோட வழக்கமான டயலாக். கைநெறய பணத்தை கொட்டினா கவர்ச்சி காட்டாத ஹீரோயின் யார் இருக்கான்னு கமென்ட் அடிக்கிறாங்களாம்... அடிக்கிறாங்களாம்...
லகரத்துல பேமென்ட் வாங்கற ஹீரோ குறைஞ்சிட்டாங்களாம்... குறைஞ்சிட்டாங்களாம்... பெரிய ஸ்டார், நடுத்தர நடிகர், காமெடி நடிகருங்கனு யார்கிட்ட போனாலும் கோடிகள்லதான் சம்பளம் கேக்குறாங்களாம். இதால சின்ன பட்ஜெட் தயாரிப்புங்க அவங்கள நெருங்க முடியலயாம். லட்சக்கணக்குள பேமென்ட் வாங்கி 10 படத்துல நடிக்கறதைவிட ஒரு படத்துல நடிச்சாலும் ‘சி‘ கணக்குல பேமென்ட் வந்தாதான் நிம்மதினு நடிகருங்க சொல்றாங்களாம். இதையே டாப் லிஸ்ட்ல இருக்கிற சில ஹீரோயினுங்களும் ரிபீட் பண்றாங்களாம்... பண்றாங்களாம்...
எம்எஸ் கர்நாடக இசை பாடகியோட வாழ்க்க வரலாறு படத்துல சில்க் வேஷத்துல நடிச்ச வித்யாமான நடிகை நடிக்க¤றாராம்... நடிக்கிறாராம்... கன்னாபின்னான்னு கவர்ச்சி காட்டி நடிச்ச வித்ய நடிக, புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி வேஷத்துல நடிச்சா எதித்து போராடுவோம்னு ஒரு குரூப் சொல்லிட்டிருக்காம். இதுக்கிடைல கர்நாடக பாடகியோட வாழ்க்க வரலாறு ரைட்ஸ் எங்கிட்டதான் இருக்குனு ரெண்டுபேர் மோதிக்கிறாங்களாம். தமிழ்ல படத்தை இயக்குறதா சொன்ன ராஜீவான மேன இயக்கம்கிட்ட கேட்டா, நோ கமென்ட்சுன்னு நைசா நழுவிபோறாராம்... போறாராம்...