அஜீத் நடிக்கும் வெற்றிகொண்டான்
3/23/2013 10:54:18 AM
வலை படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் புதிய படத்துக்கு வெற்றி கொண்டான் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிறுத்தை படத்தினை இயக்கிய சிவா இயக்குகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜீத்துக்கும் இந்தத் தலைப்பு பிடித்துவிட்டதாம். இதில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.