Home  | Videos  | Sitemap  |RSS  | Facebook  | Twitter  
  • Will not marry with tamilan

    தமிழனை மணக்க மாட்டேன்

    “தமிழ்ப் பையன்கள் என்னை காதலிக்கட்டும். ஆனா, நான் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்...’’ அண்மையில் இப்படி திருவாய் மலர்ந்தருளி இருப்பவர் வளரும் நடிகை லட்சுமி மேனன். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழைய சைக்கிளில் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த லட்சுமி மேனனுக்கு தமிழ் சினிமா இதுவரை அள்ளிக் கொடுத்திருப்பது இரண்டு கோடி வரைக்கும். அந்த நன்றி உணர்ச்சியில்தான் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். இத்தனைக்கும் திருமண வயதை எட்டியிராத மைனர் பெண். நம்ம ஊரில் இந்த வயதில் காதல், கல்யாணம் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கே தயக்கம் காட்டுவார்கள். நடிகை என்கிற தகுதி அவரை பேச வைத்திருக்கிறது.

    காதலும், கல்யாணமும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி கருத்துச் சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. இதில் மற்றவர்கள் விமர்சிக்க என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். உங்கள் வீட்டுக்கு ஒருவர் விருந்துக்கு வருகிறார். ‘நீங்க கூப்பிட்டதுக்காக வந்தேன். நீங்க என்ன சாப்பாடு வேணாலும் விதவிதமா செஞ்சு வையுங்க. ஆனா, நான் எங்க வீட்டுல போயி சாப்புட்டுக்கிறேன்’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோலத்தானே இதுவும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. ஒரு நடிகை ஒரு கல்லூரி விழாவில் பணம் வாங்கிக் கொண்டு பங்கேற்கச் செல்கிறார். அந்த நடிகை நிச்சயமாக அந்தக் கல்லூரியில் படிக்கும் எந்த மாணவனையும் காதலிக்கப்போவதில்லை, கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போவதில்லை. அப்படி இருக்கும்போது அந்தக் கல்லூரி விழாவில் பேசிய நடிகை ‘என்னை காதலிக்கும் தகுதியோ, கல்யாணம் பண்ணிக்கொள்ளும் தகுதியோ உங்களில் யாருக்கும் இல்லை’ என்று பேசினார். விளைவு - அந்த நடிகையை கல்லூரியின் பின் கேட்டின் வழியாகத்தான் அனுப்பி வைத்தனர்.

    இரண்டு படங்களில் நடித்து விட்டால் தமிழ் நாட்டு ரசிகனை பையன்கள் (பாய்ஸ்) என்று அழைக்கும் தகுதி வந்து விடுமா என்ன? இது தனிப்பட்ட லட்சுமி மேனன் கருத்து மட்டும் அல்ல. பெரும்பாலான மலையாள நடிகைகளின் மன ஓட்டமே இதுதான். அதைத்தான் லட்சுமி மேனனும் பிரதிபலித்திருக்கிறார்.

    கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்கள். தமிழ்நாட்டில் கோலோச்சிய நடிகைகள், கோடிக்கணக்கில் சம்பாதித்த பெரும்பாலான நடிகைகள் இங்கு சொத்துக்களைத்தான் குவித்தார்கள். திருமணம் செய்து கொண்டு சொந்தங்களை குவித்தது அவர்கள் சொந்த மண்ணில்தான். முற்போக்கு சிந்தனை கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரேவதிகூட ஒரு மேனனைத்தான் திருமணம் செய்து கொண்டார். இப்போது பல காதல்களால் பரபரப்பைக் கிளப்பி வரும் நயன்தாராவின் காதல்கூட இப்போது மையம் கொண்டிருப்பது ஆர்யா என்ற மலையாளியிடம்தான் என்கிறார்கள்.

    காதலுக்கு மதமில்லை, மொழியில்லை என்று வசனம் பேசும் நடிகைகள் தங்களின் காதல் கல்யாணம் என்றால் மட்டும் சொந்த மண்ணுக்குச் சென்று விடுகிறார்கள். பெரும் பாலும் ஒரு சில ஆண்டுகளிலேயே அதுவும் கசந்து பிரிந்து விடுகிறார்கள் என்பது தனிக் கதை. ஒரு மலையாள நடிகை தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று தமிழ் நாட்டில் எந்த இளைஞனும் தவம் இருக்கவில்லை.

    ஒரு தமிழ் இளைஞனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என்று எந்த மலையாள நடிகையும் தமிழ்நாட்டுக்கு வருவதில்லை. காதலும், திருமணமும் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். அது திட்டமிட்டு நடப்பதல்ல. திட்டமிட்டு நடந்தால் அது வியாபாரம். இதையே ஒரு தமிழ் நடிகை கேரளாவில் நின்று சொல்லி யிருக்க முடியுமா? கடைசியாக ஒன்று எதைப் பேச வேண்டும் என்பதை விட எதைப் பேசக்கூடாது என்பதை அறிந்து கொள்வதுதான் வளரும் கலைஞர்களுக்கு அழகு. அதை லட்சுமிமேனனும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டுக்கு கலைச் சேவை செய்ய வரும் வருங்கால கனவுக் கன்னிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    முழு விவரம் »
  • Kiss in the middle of the road

    நடுரோட்டில் கிஸ்

    கதைக்காக ஹாலிவுட், கொரியா, ஈரானிய மொழி படங்களைத் தேடி அலையாமல் தன் சொந்தத் தம்பியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் ‘வருசநாடு’ படத்தை இயக்குநர் சூரியபிரகாஷ் இயக்கியிருக்கிறாராம். ‘மாயி’ படத்தை இயக்கிய அதே இயக்குநர்தான்.

    ‘தைரியம்’ குமரன் நாயகனாக நடிக்க, பாலிவுட் இறக்குமதியான சிருஷ்டி நாயகியாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் சம்பத்ராம். இந்தப் படத்தின் ஹீரோ ஏற்கனவே நடிப்பு அனுபவம் உள்ளவராக இருந்தாலும் முத்தக் காட்சியில் நடிக்க அதிக டேக் வாங்கிவிட்டாராம். காரணம், அந்தக் காட்சியை நடுப் பகலில் நடுரோட்டில் எடுத்திருக்கிறார்கள். ‘‘இதுவும் காதல் கதையா... என்கிற கேள்விக்கு ‘ஆமாம்’ என்பதுதான் என் பதில். ஆனால், இதில் காதலர்கள் சந்திக்கும் பிரச்னை புதுசாக இருக்கும். அழகர், செல்வியாக நடித்திருக்கும் ஹீரோ, ஹீரோயின் கேரக்டரும் அழுத்தமாக இருக்கும்...’’ என்கிறார் சூரியபிரகாஷ்.

    முழு விவரம் »
  • Regina in cell phone web

    செல்போன் வலையில் ரெஜினா

    கோடைமழை போல், டோலிவுட்டுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து விட்டு, அவ்வப்போது கோலிவுட் வந்து நடிப்பதுதான் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ரெஜினா கெசன்ட்ராவின் பாலிசி. அவரை எளிதில் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு செல்போன் வலை பின்னிப் பெடலெடுக்கிறது. இதனால்தான் அவரை புதுப் படத்தில் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை என்று, தமிழ் இயக்குநர்கள் சிலர் சொல்கிறார்கள்.

    தமிழில் ரெஜினாவுக்கு ‘நிர்ணயம்’, பிரகாஷ்ராஜ் இயக்கி நடிக்கும் ‘உன் சமையல் அறையில்’ படங்கள் இருக்கின்றன. ‘உன் சமையல் அறையில்’ படம் தெலுங்கிலும் உருவாகிறது. தவிர, ‘கௌரவம்’ அல்லு சிரிஷ் ஜோடியாக ஒரு படம் இருக்கிறது. என்ன இருந்து என்ன பிரயோஜனம்? தமிழ்நாட்டிலுள்ள மீடியாக்கள் ரெஜினாவைத் தொடர்புகொண்டு பேசுவது என்பது, குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாக இருக்கிறது என் பதுதான் கோலிவுட்டில் பேச்சு. இதை அவர் உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்வாரா என்று தெரியவில்லை.

    முழு விவரம் »
  • Just stop rumors of a love- Samantha

    காதல் வதந்திகளை கொஞ்சம் நிறுத்துங்கள் - சமந்தா

    எனக்கு சினிமாவில் நிறைய வேலை இருக்கிறது. இந்த காதல் வதந்திகளைக் கொஞ்சம் நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு மீடியாவில் கடந்த சில மாதங்களாக பிரதானமாக பேசப்படுவது சமந்தா - சித்தார்த் காதல் பற்றித்தான். இருவரும் தீவிரமாகக் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் உள்ளார்ககள். இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வந்த சமந்தாவிடம், சித்தார்த்தை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டதற்கு, "இதெல்லாம் வீண் வதந்தி.இப்போதைக்கு காதலுமில்லை, திருமணமும் இல்லை. எனக்கு சினிமாவில் நிறைய வேலை இருக்கிறது. எனவே இந்த வதந்திகளை நிறுத்தும்படி வேண்டுகிறேன். தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறேன். லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். இந்த நேரத்தில் இதுபோன்ற கேள்விகளைக் கூட நான் விரும்பவில்லை," என்றார்.

    முழு விவரம் »
  • Raina Sruthi Hasan Secret Party

    ரெய்னா, ஸ்ருதிஹாசன் ரகசிய விருந்து

    மும்பை இசைக் கலைஞர், நடிகர் சித்தார்த், பின்னர் நடிகர் தனுஷ் என பலருடன் நெருக்கமாக இணைத்துப் பேசப்பட்ட ஸ்ருதிஹாசன், இப்போது கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் நெருக்கமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை அணி ஆடும் ஆட்டங்களின் போது பார்வையாளராக தவறாமல் பங்கேற்று கைத்தட்டி, ரசிகர்களைப் பார்த்து விசில் போடு என்றெல்லாம் உற்சாகப்படுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த ஆண்டு விளையாட்டைப் பார்க்க வந்த ஸ்ருதியும் ரெய்னாவும் நண்பர்களாகப் பழக ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா 52 பந்தில் 99 ரன்கள் விளாசினார். இந்த போட்டியைப் பார்க்க வந்த ஸ்ருதிஹாசன், பின்னர் இரவில் ரெய்னாவுடன் விருந்து சாப்பிட்டுள்ளார்.

    முழு விவரம் »
  • Rahul Breathe Singh pair with Gautham Karthik

    கௌதம் கார்த்திக் ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங்!

    நந்தினி ரெட்டி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘அல மொதலைந்தி’. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நித்தியா மேனன். புதுமுகம் ரவி தியாகராஜன் இயக்கத்தில் தமிழில் ரீ-மேக் ஆக இருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கில் நடித்த நித்தியா மேனனையே நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால், ‘ஏற்கெனவே நடித்த ஒரு வேடத்தில் மீண்டும் நடிக்க எனக்கு விருப்பமில்லை’ என்று கூறிக்கொண்டு ஒதுங்கிக் கொண்டார் நித்தியா மேனன். இப்போது அவருக்கு பதிலாக ‘புத்தகம்’ படத்தில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங்  நடிக்க இருக்கிறார்.

    முழு விவரம் »
  • Not love with nayanthara- Arya interview

    நயன்தாராவுடன் காதல் இல்லை- ஆர்யா பேட்டி

    நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன் வந்த செய்தி வெறும் சினிமா விளம்பரம்தான் என்றும், நயன்தாராவை தான் காதலிக்கவில்லை என்றும் நடிகர் ஆர்யா கூறியுள்ளார். நயன்தாராவும் ஆர்யாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக நேற்று முன்தினம் பரபரப்பாக அழைப்பிதழ் அனுப்பி வைத்தனர். ஆனால் அடுத்த இரு தினங்களில் இது வெறும் சினிமா விளம்பர பரபரப்புதான் என்பது தெரிந்துவிட்டது. நயன்தாரா - ஆர்யா நடித்து வரும் ராஜா ராணி படத்திற்காக கொடுக்கப்பட்ட விளம்பரம் அது. இதுகுறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது: "நானும், நயன்தாராவும் நல்ல நண்பர்கள். நான், நயன்தாராவை காதலிப்பதாக வந்த செய்திகள் பொய்யானவை. எங்களுக்கு இடையே, காதல் எதுவும் கிடையாது. நயன்தாராவும் நானும் ராஜா ராணி என்ற படத்தில் இணைந்து நடிக்கிறோம். அந்த படத்தில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சி உள்ளது. அதை சமீபத்தில் படமாக்கினர். அதைத்தான் பட விளம்பரமாக வெளியிட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    முழு விவரம் »
  • Oviya not covered with a pair Vimal

    விமலுடன் ஜோடி சேராத ஓவியா

    ஓவியாவுக்கு ‘அகராதி’ படம் ரிலீசாகவில்லை. ஆனால், அதைப்பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை. அடுத்தடுத்து புதுப் படங்களை ஒப்புக்கொண்டு அதிக பணம் சம்பாதிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிப்பில் ‘மதயானைக் கூட்டம்’, தவிர ‘ப்ரியம்’ பாண்டியன் இயக்கத்தில் த்ரிஷா, பூனம் பஜ்வா ஆகியோருடன் ஒரு படம், இயக்குநர் பாண்டிராஜ் ரிலீஸ் செய்யும் ‘மூடர் கூடம்’ படங்களில் நடிக்கும் அவர், மலையாள ‘சாப்பாகுரிசு’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘புலிவால்’ படத்தில் பிரசன்னா ஜோடியாக நடிக்கிறார். இதில் விமல் நடிக்கிறார் என்றாலும், அவருடன் ஜோடி சேரவில்லை.

    முழு விவரம் »

 

First Previous
1
2
3
4
5
6
7
8
9
10
Next Last
pause play
  •   பரிந்துரை
    Valai Shooting Spot Stills Uyirukku Uyiraga Stills
    Vaathu Movie Stills Yaan Movie Stills
    Thalaiva Stills Theeya Velai Seiyyanum Kumaru
    Stars At Hira Manik Awards 2013 Thirumathi Thamizh Movie Press Meet
      Latest News
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  கமலுடன் கைகோர்க்கும் யுவன் சங்கர் ராஜா
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  10ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி: நடிகை சனாகானுக்கு போலீஸ் வலை
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  பிரபு சாலமன் இயக்கும் சுனாமியை மையப்படுத்திய கதை
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  இயக்குனர் பாலாவுடன் இணையும் இசையமைப்பாளர்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்
    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news  ஜூன் 22-ல் ‘தலைவா’ ஆடியோ வெளியீடு