கோவாவில் காதலனுடன் நீது சந்திரா
ஆதிபகவன் ஷூட்டிங்கிற்காக கோவா சென்ற நீது சந்திரா, பாலிவுட் ஹீரோ ரன்தீப்புடன் அங்கு பொழுதை கழித்தார். ஜெயம் ரவி ஜோடியாக ‘ஆதிபகவன்Õ படத்தில் நடிக்கிறார் நீது சந்திரா. இதன் ஷூட்டிங் கோவாவில் நடந்தது. இதற்காக அங்கு தங்கி இருந்தார் நீது. இதற்கிடையில் பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹுடாவுடன் இணைத்து நீது பற்றி கிசுகிசு பரவியது. ரன்தீப் ஏற்கனவே சுஷ்மிதா சென்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார். சீனியர் நடிகையுடன் தனது பெயர் இணைத்து பேசப்படுவதை ரன்தீப் விரும்பவில்லை. இதை தவிர்க்கும் பொருட்டு மீடியாவிடமிருந்து விலகி சென்றார்.
அதற்கு மாற்றுவழி இளம் நடிகையுடன் பழகுவதுதான் என நண்பர்கள் யோசனை கூறினர். அந்த நேரத்தில் நீதுவின் நட்பு கிடைத்தது. அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவருடன் அடிக்கடி செல்போனில் பேசியும், டேட்டிங் செய்தும் நெருக்கமானார். கடந்த ஒரு வருடமாக இருவரும் பழகி வருகின்றனர். ஆனால் இருவருமே இதை மறுக்கின்றனர். இந்நிலையில் நீதுவுக்கு கிரேக்க மொழி படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதற்காக 2 மாதத்துக்கும் மேல் அவர் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. இதற்கிடையில் ரன்தீப்புடன் ஜோடியாக இருக்க விரும்பினார். அதற்கேற்றார்போல் ரன்தீப் நடிக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடந்தது. அதில் பங்கேற்க சென்றார். ‘ஆதிபகவன்' ஷூட்டிங் முடிந்து பட குழுவினர் கோவாவில் இருந்து புறப்பட்ட பிறகும் ரன்தீப்புக்காக நீது மட்டும் அங்கேயே தங்கி இருந்தார். அவர் வந்தவுடன் அவருடன் ஷாப்பிங், டேட்டிங் என பொழுதை கழித்துவிட்டு வெளிநாடு புறப்பட்டு சென்றார் நீது.
|
ஹன்சிகாவுக்கு சிம்பு சிபாரிசு
சிம்பு சிபாரிசால் அவரது புதிய படத்திலும் ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இருவரையும் இணைத்து கிசுகிசு கிளம்பியுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேட்டை மன்னன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இப்படம் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் வாலு படத்தில் மீண்டும் ஹன்சிகாவே ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று சிம்பு கூறி வந்தார். தற்போது அவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளுக்காக நேரம் ஒதுக்கி ஹன்சிகா நடித்துக்கொடுத்தார். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது,‘‘சிம்புவுடன் நடிக்கும் அடுத்த படத்துக்கான முன்னோட்ட காட்சியில் நடிப்பதற்காக சென்னையில் தங்கி இருக்கிறேன்.
இருவரும் விதவிதமான காஸ்ட்யூம்களில் ஜோடியாக தோன்றும் போட்டோ ஷூட் நடந்தது. ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் ஒன்றிரண்டு மாதத்துக்கு பிறகுதான் தொடங்குகிறது’’ என்றார். ‘வாலு’ படத்தை புது இயக்குனர் விஜய் இயக்குகிறார். சந்தானம், கணேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். ஒரே ஜோடியை ரிபீட் செய்யாமல், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ஹீரோயினுடன் நடிக்க வேண்டும் என சிம்பு முடிவு எடுத்திருந்தார். ஆனால் அந்த முடிவை அவரே கைவிடும் வகையில் ஹன்சிகாவுடன் மீண்டும் நடிக்கிறார். இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. எனவேதான் ஹன்சிகாவுக்கு சிம்பு சிபாரிசு செய்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.
|
‘நடிகர்களுடன் ஊர் சுற்றுகிறேனா’
பாலிவுட் ஸ்டார் நடிகைகளில் ஒருவர் பிபாஷா பாஸு. இவர் ஹீரோ ஜான் ஆப்ராகமுடன் நெருக்கமாக இருந்தார். பார்ட்டி, டிஸ்கோத்தே என்று ஜோடியாக சுற்றினர். இருவரும் காதலிக்கிறார்கள், திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்று கிசுகிசு பரவியது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்தனர். சமீபத்தில் ஜான் ஆப்ரகாம், பிரியா ரன்சல் என்ற பெண்ணை மணக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து கோபம் அடைந்த பிபாஷா பாஸு, ஜான் ஆப்ரகாமை பிரிந்தார்.
இந்நிலையில் சாஹித் கபூர், ராணா தக்குபாத்தி ஆகியோருடன் பிபாஸா பாஸு நெருக்கமாக இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசு பரவியது. அவர்களுடன் டேட்டிங் செல்வதாகவும் கூறப்பட்டது. இதையறிந்து கோபம் அடைந்த பிபாஷா மீடியாக்கள் மீது பாய்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது: நீண்ட நாட்களாகவே என்னை ஹீரோக்களுடன் இணைத்து கிசுகிசு வந்துகொண்டிருக்கிறது. டேட்டிங் போகிறேன். ஹீரோவை பிரிந்துவிட்டேன், மீண்டும் இணைந்துவிட்டேன், திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று பல கதைகள் உலவுகிறது. இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால் இது எதுவுமே நடக்கவில்லை. ஜாலியாக ஒரு ஹீரோவுடன் பேசினால் உடனே அவரை விரும்புகிறேன் என்று அர்த்தமில்லை. ஹீரோக்களை சந்தித்தால் அதை டேட்டிங் என்று குறிப்பிடக்கூடாது.
|
த்ரிஷா,பிபாஷாவுடன் நெருக்கமா?
த்ரிஷா, பிபாஷாவுடன் நெருக்கமா என்றதற்கு ராணா பதில் அளித்தார். த்ரிஷாவுடன் காதல், பிபாஷாவுடன் டேட்டிங் செல்கிறார் என்று தெலுங்கு நடிகர் ராணா பற்றி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு ராணா பதில் அளித்தார். அவர் கூறியதாவது: இந்தியில் ‘தம் மாரோ தம் படத்தில் நடித்தேன். பிபாஷா பாசு ஜோடியாக நடித்தார். அப்போதுமுதல் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். புத்தாண்டின்போது இருவரும் கோவா சென்றோம். இதுபற்றி என்னை கேட்காதவர்கள் இல்லை. ‘நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். கோவாவுக்கு நாங்கள் மட்டுமா சென்றோம். எங்களைப்போல் 200 பேருக்கு மேல் சென்றார்கள். அவர்களிடம் ஏன் இதுபோல் கேட்கவில்லை. எங்களுக்குள் எந்த உறவும் கிடையாது என்பதை இன்டர்நெட்டில் தெரிவித்துவிட்டேன். ஆனாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் இருவரையும் இணைத்து பேசினால் அதில் அவர்களுக்கு ஒரு த்ரில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கிசுகிசுக்கள் முன்பு என்னை பாதித்தது. இப்போது பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிபாஸுவை பொறுத்தவரை எனக்கு நெருக்கமான நண்பர். எனக்கு அடிபட்டபோது நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அதைக்கூட காதல் என்று கதை கட்டுகிறார்கள். நண்பனுக்கு அடிபட்டால் இன்னொரு நண்பர் விசாரிக்க மாட்டாரா? எங்களை இணைத்து வைப்பதில் மற்றவர்கள் ஏன் குறியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதேபோல்தான் த்ரிஷாவுடனும் என்னை இணைத்து பேசினார்கள். எனக்கென்று ஒரு காதலி இருக்கிறார். அவர் ஐதராபாத்தில் உள்ளார். அவர் யார் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. ஆனால் நிச்சயம் சினிமா நடிகை கிடையாது. எனது திருமணம் பற்றியும் இப்போதைக்கு யோசிக்கவில்லை. இவ்வாறு ராணா கூறினார்.
|
ரூ.1 கோடி சம்பளம் கேட்டேனா?
புது படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் கேட்டு வாங்கியதாக வந்த தகவல் பற்றி பதிலளித்தார் தமன்னா. அவர் கூறியதாவது: இப்போது தெலுங் கில் நடித்து வரும் 2 படங்களை தவிர புது படங்கள் எதுவும் ஏற்கவில்லை. இதற்கிடையே ஒரு படத்துக்கு நான் ரூ.1 கோடி வாங்கியதாக தகவல் பரவியுள்ளது. இதில் துளியும் உண்மை கிடையாது. ஏதேனும் ஒரு படத்துக்கு அதுபோல் சம்பளம் வாங்கியிருந்தால் மீடியாவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். சந்தேகத்தின் அடிப்படையில் யாரும் என்னிடம் இதுபோல் கேள்வி எழுப்பியிருக்க மாட்டீர்கள்.
இந்தியில் நடிக்கப்போவதாகவும் நிறைய தகவல் வருகிறது. சில வாய்ப்புகள் வருவது உண்மைதான். இடைவெளி இல்லாமல் இப்போது கால்ஷீட் கொடுத்துவிட்டு நடித்து வருகிறேன். இதற்கிடையே இந்தியில் நடிக்க கால்ஷீட் உடனே ஒதுக்க முடியாது. அதற்காக நேரம் எடுத்து நான் தயாராக வேண்டும். இந்தியில் அறிமுகமானவள்தான் நான். இனி இந்தியில் நடிக்க வேண்டுமானால் அது பெரிய படமாக இருக்க வேண்டும். யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை எனக் கேட்கிறீர்கள். தமிழ், தெலுங்கில் பல நடிகர்களுடன் இதுவரை நடிக்கவில்லை. வாய்ப்பு வந்தால் அவர்களுடன் சேர்ந்து நடிப்பேன். குறிப்பிட்டு ஒரு நடிகருடன்தான் நடிப்பேன் என சொல்ல மாட்டேன்.
|
20 ஆண்களின் காதலை நிராகரித்தேன்
20 ஆண்களின் காதலை நிராகரித்தேன். அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றார் ஷெரின்.
பள்ளி கால வாழ்க்கை குறித்து?
என்னுடைய
பள்ளி பருவ வயதை நான் சரியாக அனுபவிக்கவில்லை. அப்போதே நடிக்க
வந்துவிட்டதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இப்போது ஆஸ்திரேலியா
சென்று டிகிரி படித்தேன்.
உங்களுக்கு பாய்பிரெண்ட் இருந்தார்களா?
5 முதல் 20 வரை என கொஞ்சம் பாய்பிரெண்ட்ஸ்தான் இருந்தார்கள்.
அவர்களுடன் பழகியது நட்பா?
அவர்களுடனான
நட்பு முறியும் வரை நன்றாக பழகினோம். பின்னர் பிரச்னை இல்லாமல் பேசி
சம்மதித்து பிரிந்துவிட்டோம். இதற்கு காரணம் அவர்கள் மனதை நான்
உடைத்ததுதான். இதற்கு காதல் காரணமா என்றால் தெரியாது.
உங்களுடைய பலம்?
என்னுடைய குடும்பம்தான் எனக்கு பின்னணி. குறிப்பாக பார்ட்டி, பார்ட்டி என்று சுற்றும் எனது அம்மாதான் எனக்கு நல்ல தோழி.
அடுத்த படம்?
தற்போது தமிழ், தெலுங்கு இருமொழியில் தயாராகும் படத்தில் நடிக்கிறேன்.
|
இயக்குனர் ஷங்கரின் காஸ்ட்லி கார்...
இயக்குனர் ஷங்கர் எற சொன்னாலே பிரம்மாண்டம் தான் எல்லோருக்கும் நினைவில் வரும்.. சினிமாவில் பிரம்மாண்டத்தை கையாளவது போல தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் ஒரு சில பிரம்மாண்டங்களை செய்துவருகிறார் ஷங்கர். சமீபத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இதற்கு சுங்கவரி மட்டுமே ஒன்றே முக்கால் கோடி கட்டினார். அமிதாப், ஆமிர்கானுக்கு பிறகு ஷங்கர்தான் இந்த காரை வைத்துள்ளார்.
|
பிரபுதேவா பார்ட்டியில் பங்கேற்றது ஏன்?
பிரபுதேவாவின் பார்த்டே பார்ட்டியில் பங்கேற்றது ஏன் என்பதற்கு த்ரிஷா பதிலளித¢தார். பிரபு தேவாநயன்தாரா இடையிலான காதல் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இந¢நிலையில் சமீபத்தில் தனது பர்த்டே பார்ட்டியை கொண்டாடினார் பிரபு தேவா. இந்த பார்ட்டியில் திடீரென ஆஜராகி ஷாக் கொடுத்தார் த்ரிஷா. பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருக்கும் போஸையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி த்ரிஷா கூறியது: தெலுங்கில் எனக்கு பிரேக் தந்தவர் பிரபு தேவா. அவர் இயக்கிய முதல் 2 படங்களிலும் நான்தான் ஹீரோயின். அப்போது முதலே நாங்கள் நல்ல நண்பர்கள்.
இடையில் எப்போது சந்தித்தாலும் சகஜமாக பேசுவோம். நட்பு காரணமாக அவருக்கு பர்த்டே வாழ்த்து கூறுவது எனது கடமையாக நினைத்தேன். அதனால் அவரது பர்த்டே பார்ட்டிக்கு சென்றேன். அதற்குள் ஏகப்பட்ட கட்டுக்கதைகளை எழுதி வதந்தி பரப்புகிறார்கள். இது எனக்கு புதிதல்ல. இது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. இப்போது சமரன் படத்தில் விஷாலுடன் நடிக்கிறேன். எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. மற்ற விஷயங¢களுக்கு என்னிடம் நேரம் இல்லை. அது பற்றி யோசிப்பதும் கிடையாது. இவ்வாறு த்ரிஷா கூறினார்.
|