Home  | Sitemap  |RSS  | Facebook  | Twitter    

நியுஸ் வே

  • வேராகி விழுதாகி

    மூன்று இளைஞர்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகும் படம், ‘வேராகி விழுதாகி’. இதை அமுதசுரபி இமேஜிநேஷ்னல் சார்பில் எம்.இளங்கோவன் தயாரிக்கிறார். மா.ரவிச்சந்திரதுரை இயக்குகிறார். மூன்று புதுமுகங்கள் ஹீரோக்கள். மலையாள குழந்தை நட்சத்திரம் சாருதா ஹீரோயின். ஒளிப்பதிவு, மீனா எம்.ராஜேந்திரன். குமார் வர்ஷா இசையில் பிச்சினிக்காடு இளங்கோ, அமுதசுரபி பாடல்கள் எழுதுகின்றனர். தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

  • சைதை செல்லா பாடல் வெளியீடு

    எஸ்.ஆர்.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘சைதை செல்லா’. சீத்தாபதி இயக்குகிறார். என்.ரவி ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசை. விஜய் ஆனந்த், மிதுனா, எஸ்.ஆர்.முகேஸ், சீதா உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், தயாரிப்பாளர் கே.முரளிதரன் பாடல் கேசட்டை வெளியிட, நடிகர்கள் கரண், ஆர்.கே. பெற்றனர். டைரக்டர்கள் பவித்ரன், ஹரிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • படம் பார்த்து சம்பவம் சொன்னால் பரிசு

    ஜெய்குமார் என்ற புதுமுகம் இயக்கி தயாரித்து வரும் படம், ‘உனக்காக என் காதல்’. விஷ்ணு, ஷரவன், ஷ்ரதா நடிக்கிறார்கள். படம் பற்றி நிருபர்களிடம் ஜெய்குமார் கூறியதாவது: பெரும்பான்மையான படப்பிடிப்பு முடிந்து விட்டது. கல்லூரி பின்னணியில் நடக்கும் முக்கோண காதல் கதை. சில வருடங்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய ஒரு கல்லூரி சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. படம் வெளியான பிறகு. அந்த சம்பவம் என்ன என்பதை சரியான தேதி, பெயர்களுடன் சொல்பவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறோம். அதனால் படப்பிடிப்பை ரகசியமாக நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

  • உண்மை சம்பவம்

    ஜெய்குமார் இயக்கி, தயாரிக்கும் படம், 'உனக்காக என் காதல்'. இதில் 'நினைத்தாலே இனிக்கும்' விஷ்ணு, ஷ்ரவன் ஹீரோக்கள். மும்பை ஸ்ரத்தா ஹீரோயின். மற்றும் வையாபுரி, சூரி, ஆர்.சுந்தர்ராஜன், ராஜலட்சுமி, முத்துக்காளை, அஞ்சலிதேவி நடிக்கின்றனர். 'சில வருடங்களுக்கு முன்பு, இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு உண்மை சம்பவம் படமாகிறது. என் வாழ்வோடும் சம்பந்தப்பட்டது அந்த சம்பவம். அதையே படமாக உருவாக்குகிறேன்' என்றார் ஜெய்குமார். ஒளிப்பதிவு, உத்பல். சஞ்சீவ் தர்ஷன் இசையமைக்கிறார்.

  • வவ்வால்

    ‘அரசு’, ‘கம்பீரம்’, ‘சபரி’ படங்களை தொடர்ந்து சுரேஷ் இயக்கும் படம் ‘வவ்வால்’. மார்ச் 22ம் தேதி முதல் கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. ஹீரோவாக ராகுல் அறிமுகமாகிறார். இவர், டான்ஸ் மாஸ்டர்கள் லலிதா&மணியின் மகன். ஹீரோயினாக உத்ரா உன்னி நடிக்கிறார். கேரளாவில் பிளஸ் டூ படித்து வரும் இவர், மாடலிங் செய்தவர். சினிமாவில் நடிப்பது இதுவே முதல்முறை. ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்ய, ஜெரோம் புஷ்பராஜ் இசையமைக்கிறார்.

  • ஆங்கில படத்தில் இருந்து நடிகர் திலகன் நீக்கம்

    மலையாள திரையுலகில் நடிகர் திலகன் விவகாரம் இன்னும் ஓயவில்லை. மோகன்லால் நடிக்கும் ‘கிறிஸ்டியன் பிரதர்ஸ்‘ படத்தில் இருந்து திலகன் நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திலகன், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லாலை கடுமையாக தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், நடிகர் சங்கத்தில் இருந்து திலகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், ‘டேம் 999’ என்ற ஆங்கில படத்தில் நடிப்பதற்கு திலகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இதை சோகன் ராய் என்பவர் இயக்குகிறார். இதற்கிடையே, திலகன் நடிக்கும் படத்தில் தங்களுடைய தொழிலாளர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என்று மலையாள திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் (பெப்கா) அறிவித்தது. இதையடுத்து, படத்தில் இருந்து திலகனை நீக்கி விட்டதாக சோகன் ராய் நேற்று அறிவித்தார். திலகனுக்கு பதிலாக பிரபல இந்தி நடிகர் ரஜத்கபூர் நடிக்கிறார்.

  • விஷ்ணுவுக்கு அஞ்சலி

    ‘கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் நடித்த கடைசி படம் 'ஆப்த ரக்ஷா'. இப்பட ரிலீசையொட்டி அவரது கல்லறைக்கு சென்றேன். விஷ்ணுவின் மனைவி பாரதி மற்றும் வளர்ப்பு பிள்ளைகளும், ரசிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்' என்றார் இயக்குனர் பி. வாசு. 'தியேட்டருக்கு சென்று படம் பார்த்த பாரதி, விஷ்ணு தோன்றிய ஒவ்வொரு காட்சியையும் ரசித்தார். இப்படத்தை தமிழில் இயக்கும்
    எண்ணம் இருக்கிறது. அதற்கான முயற்சியை விரைவில் தொடங்குவேன்' என்றார் வாசு.

  • மெய்யல்ல... பொய்யல்ல...

    காதலில் தோல்வி அடைந்தவர்கள், அதிலிருந்து மீண்டு, எவ்வாறு தங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்கிறார்கள் என்ற கதையுடன் உருவாகும் படம் ‘மெய்யல்ல... பொய்யல்ல...’ புதுமுகங்கள் சந்துரு, அஸ்மிதா ஜோடி. வில்லனாக ஸ்ரீகாந்த் மற்றும் ஜாக், பிரகாஷ் நடிக்கின்றனர். டைனமிக் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இசை, ஹாரிக் ரோஷன். சுருளிப்பாண்டியன் எழுதி இயக்குகிறார். சென்னையில் படப்பிடிப்பு நடைபெறு
    கிறது.

 

Previous
1 3 5 7 9 11 13 15 17 19
2 4 6 8 10 12 14 16 18
Next
  சினி விழா
கிராமி விருது விழா
ஆஸ்கார் விருது விழா
பாராட்டு விழா
ஆஸ்கார் ரெட் கர்பெட் விழா
  வீடியோ
ஈ - புஷ்
சாட்ரூம்
காமெடி
  ட்ரெ‌ய்ல‌ர்
யாதுமாகி
Garuda Yuddham
அகம் புறம்