சென்னை: சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லா துறையிலும் ஆணாதிக்கம் நிரம்பி வழிகிறது என்கிறார் ஸ்ருதிஹாசன். பிரபாஸ் ஜோடியாக சலார், சிரஞ்சீவி ஜோடியாக வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம் என நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவர் கூறியது: சினிமா துறையில் ஆணாதிக்கம் இருக்கிறதா என கேட்கிறார்கள். சினிமா துறை முழுவதும் ஆணாதிக்கம் தான் நிரம்பியுள்ளது. பெண்கள் இங்கு அதிகம் வேலை செய்ய தயங்குகிறார்கள். குறிப்பாக தமிழ் பெண்கள், சினிமா துறைக்கு வர தயங்குவதாக சொல்வது பற்றியும் யோசிக்க வேண்டும். ஆனால், ஆண் ஆதிக்கம் என்பது இங்கு மட்டுமே கிடையாது. இந்த முழு சொஸைட்டியும் ஆணாதிக்கத்தால் நிரம்பி வழிகிறது. அதுதான் நிஜம். எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அங்கு ஆண்கள் அரசியல் செய்து, பெண்களை காலி செய்கிறார்கள். அல்லது பாலியல் தொந்தரவு தரும் சூழலும் உள்ளது. இதையெல்லாம் மீறித்தான் பெண்கள் சாதிக்க வேண்டியுள்ளது. இப்போது நடித்து வரும் படங்களில் எனக்கு நல்ல வேடங்கள் கிடைத்துள்ளன. எல்லாமே ஆக்ஷன் படங்கள்தான் என்றாலும் எனக்கு நடிப்பதற்கும் வாய்ப்புள்ள வேடங்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
எல்லா துறையிலும் ஆணாதிக்கம்: ஸ்ருதிஹாசன் குற்றச்சாட்டு
0 comment
37