மீடியாவின் அதி நவீன தொழில்நுட்ப வடிவம் கிராபிக்ஸ் நாவல். கார்டூன், அனிமேஷன் படங்களை தொடர்ந்து இந்த பாணி இப்போது வளர்ந்து வருகிறது. அந்த வரிசையில் உருவாகும் ஒரு கிராபிக்ஸ் நாவல் அதர்வா. இதில் சிறப்பு என்னவென்றால். இதில் முக்கிய கேரக்டரில் தோன்றுவது முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி. அமேசான் தளத்தில் வெளியிடப்படும் இந்த நாவல் குறித்த டீசர் வீடியோவை தல தோனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரமாண்டமாகவும் பெரும் பொருட்செலவில் இந்த கிராபிக்ஸ் நாவல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கிராபிக்ஸ் நாவல் படிக்கும் குழந்தைகளுக்கும் தோனி ரசிகர்களுக்கும் இந்த கிராபிக்ஸ் நாவல் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்றும் தயாரிப்பு தரப்பில் கூறியுள்ளனர். தோனி விரைவில் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இது அதன் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
16