சென்னை: வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) 8 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன. அதன் விவரம்: ‘சீரன்’ படத்தை இயக்குனர் எம் ராஜேஷிடம் உதவியாளராக இருந்த துரை கே முருகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இனியா மூன்று வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். ‘ஒரே பேச்சு ஒரே முடிவு’ படத்தை மலையாள இயக்குனர் வி.ஆர். எழுத்தச்சன் இயக்கியிருக்கிறார். புரூஸ்லி ராஜேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்க, ஸ்ரிதா சுஜிதரன் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் கடந்த மாதம் வெளியான ‘சத்தியபாமா’ படத்தின் தமிழ் டப்பிங் அதே பெயரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருடன் நவீன் சந்திரா, பிரகாஷ்ராஜ், ரவிவர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ‘அப்பு VI Std’, வசீகரன் பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ‘கல்லூரி’ வினோத், டார்லிங் மதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ‘செல்ல குட்டி’ படத்தை சகாயநாதன் இயக்கியுள்ளார். புது முகங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ‘ஆரகன்’ படத்தை அருண் கே.ஆர். இயக்கத்தில் மைக்கல் தங்கதுரை ஹீரோவாக நடித்துள்ளார். காளிமுத்து காத்த முத்து இயக்கியுள்ள படம் ‘வேட்டைக்காரி’. ராகுல், சஞ்சனா சிங் நடித்துள்ளனர். ‘நீல நிற சூரியன்’ படத்தை திருநங்கையான சம்யுக்தா விஜயன் இயக்கி, நடித்துள்ளார்.
149