வேலைக்குச் செல்லாமல் கிராமத்தைச் சுற்றும் ஆதவ் பாலாஜி, காதலை மட்டும் சரியாகச் செய்கிறார். மாணவி மதுனிகாவை தீவிரமாக காதலி
வேலைக்குச் செல்லாமல் கிராமத்தைச் சுற்றும் ஆதவ் பாலாஜி, காதலை மட்டும் சரியாகச் செய்கிறார். மாணவி மதுனிகாவை தீவிரமாக காதலிக்கும்போது, அவர்களின் காதலுக்கு சாதி குறுக்கே வருகிறது. இதனால், நண்பர்கள் உதவியுடன் ரகசிய திருமணம் செய்துகொள்கின்றனர். மதுனிகாவின் தந்தை ராஜ்கபூர் தனக்கும், மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார். மதுனிகாவின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ்ச்செல்வம் இருவரையும் கொலைவெறியுடன் துரத்துகிறார். இதனால், நண்பர்களுடன் ஆதவ் பாலாஜியும், மதுனிகாவும் சென்னைக்கு தப்பித்துச் செல்கின்றனர். சாதிவெறியால் துரத்தப்பட்ட அவர்கள், சென்னையில் ஆடுகளம் ஜெயபாலன் தலைமையிலான பாலியல் கொலைக்கும் பலிடம் சிக்கிக்கொள்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்தார்களா என்பது மீதி கதை. மோகன்லால் சாயலில் இருக்கிறார், ஆதவ் பாலாஜி. நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும். மதுனிகாவும் அப்படியே. இருவரும் பாடல் காட்சியில் இயல்பாக நடித்துள்ளனர். அவரது நண்பர்களாக வருபவர்கள் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர். ஆடுகளம் ஜெயபாலன் கண்களை உருட்டி, மிரட்டி வில்லத்தனம் செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரணி இசை அமைத்துள்ளார். அவரது பழைய ஹிட் பாடல்களின் வாசனை மணக்கிறது. ஆர்.வேலுவின் ஒளிப்பதிவு பரவாயில்லை. கிராமத்தில் சாதிவெறியையும், நகரத்தில் பாலியல் வெறியையும் சொல்ல வந்த இயக்குனர் வேலன், இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். ஆடுகளம் ஜெயபாலன் குரூப்புக்கு ஹீரோ பாடம் புகட்டியிருப்பதன் மூலம் இயக்குனர் ஓரளவு பளிச்சிட்டுள்ளார்.