ஐடி கம்பெனி இன்ஜினியர் பாபி சிம்ஹா, சரியாகத் துங்காமல் வேலையே கதியென்று கிடக்கிறார். இதனால் அவரது மூளையில் பிரச்னை ஏற்பட
ஐடி கம்பெனி இன்ஜினியர் பாபி சிம்ஹா, சரியாகத் துங்காமல் வேலையே கதியென்று கிடக்கிறார். இதனால் அவரது மூளையில் பிரச்னை ஏற்பட்டு, அடிக்கடி நிதானம் இழந்து தவிக்கிறார். பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விலகி, அமைதியான இடத்தில் சில நாட்கள் ஓய்வெடுத்தால், அவரது பிரச்னை சரியாகும் என்று டாக்டர் அட்வைஸ் செய்கிறார். இதையடுத்து பாபி சிம்ஹா தனது மனைவி கஷ்மீரா பர்தேசியுடன் அடர்ந்த காட்டில் காரில் பயணிக்கிறார். அப்போது கடும் மழையின் காரணமாக அங்கிருக்கும் வசந்த முல்லை விடுதியில் அவர்கள் தங்குகின்றனர். அப்போது கஷ்மீரா பர்தேசிக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதற்கான மருந்தை வாங்கிக்கொண்டு விடுதிக்குத் திரும்பும் பாபி சிம்ஹாவிடம் விடுதியின் மேனேஜர், ‘இதற்கு முன்பு நீங்கள் இங்கு வரவில்லை. இப்போதுதான் வருகிறீர்கள்’ என்று சொல்லி குழப்புகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.கதை முழுக்க இரவில் நடக்கிறது. இரவு முழுக்க மழை பெய்கிறது. இவ்விரு சவால்களை எதிர்கொண்டு, வித்தியாசமான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படத்தைக் கொடுத்துள்ளார், இயக்குனர் ரமணன் புருஷோத்தமா. பாபி சிம்ஹாவின் பாடிலாங்குவேஜும், டயலாக் டெலிவரியும் அசத்தல். கணவன் மீது அக்கறை கொண்ட மனைவி வேடத்தை கஷ்மீரா பர்தேசி நிறைவாகச் செய்துள்ளார். சிறப்புத்தோற்றத்தில் ஆர்யா அட்டகாசம் செய்துள்ளார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், ராஜேஷ் முருகேசனின் இசையும் கலந்து, திரையில் கணிசமான திகிலைப் பரப்பி இருக்கிறது. மருத்துவ ரீதியிலான சில பிரச்னைகளைச் சொல்லி, படத்தின் கதையுடன் அதை இணைத்திருப்பது இயக்குனருக்கான வெற்றி. இன்றைய பரபரப்பான உலகில் மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்ற மேசேஜை சொல்லப்பட்டுள்ளது. முடிவில் 2ம் பாகத்துக்கான ‘லீட்’ கொடுக்கப்பட்டுள்ளது. அது படத்தின் கான்செப்ட்டை விட்டு விலகுகிறது. மற்றபடி இது நல்ல முயற்சி.