கொடை - விமர்சனம்
2/18/2023 1:51:15 PM
கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த இளைஞர், கார்த்திக் சிங்கா. அங்கு சமூக சேவை செய்பவர், அனயா. சினிமா வழக்கப்படி அவர்கள் காதலி
கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த இளைஞர், கார்த்திக் சிங்கா. அங்கு சமூக சேவை செய்பவர், அனயா. சினிமா வழக்கப்படி அவர்கள் காதலிக்கின்றனர். காதல், கலாட்டா, டூயட் என்று வாழ்க்கை ஜாலியாக நகரும்போது, வில்லன் அஜய் ரத்னம் குறுக்கிடுகிறார். அப்பாவிகளிடம் பணம் வாங்கி, அதைப் பல மடங்காக திருப்பிக் கொடுக்கிறேன் என்று ஏமாற்றுகிறார். அப்படி சில ஏழைகளை ஏமாற்றிய அவருக்குப் பாடம் கற்பிக்க திட்டமிடுகிறார், கார்த்திக் சிங்கா. அதன் பிறகு நடப்பதே மீதி கதை.
எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, போஸ் வெங்கட், கு.ஞானசம்பந்தன், கே.ஆர்.விஜயா, நளினி, ஆனந்த் பாபு, கராத்தே ராஜா என்று அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இருந்தும், எந்த சீரியசும் இல்லாமல் கொடைக்கானலுக்கு டூருக்குச் சென்று, இரண்டு சீன்கள் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தது போலிருக்கிறது படம்.
அதுவும் காமெடி என்ற பெயரில் ரோபோ சங்கர் செய்யும் காரியங்களும், டபுள் மீனிங் டயலாக்குகளும் முகம் சுளிக்க வைக்கிறது. கதையைப் பற்றி கவலைப்படாமல், தன் கடமையை தெளிவாகச் செய்துள்ளார், ஒளிப்பதிவாளர் அர்ஜூனன் கார்த்திக். சுபாஷ் கவியின் இசை பரவாயில்லை. கார்த்திக் சிங்காவும், அனயாவும் இயக்குனர் சொன்னதைச் செய்துள்ளனர்.
அனுபவம் வாய்ந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் சரியாகப் பயன்படுத்தாமல், மேம்போக்கான ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் ராஜா செல்வம்.