65 - திரை விமர்சனம் - விமர்சனம்
3/13/2023 12:28:06 PM
Sony Pictures, Adam Drive, Ariana Greenblatt, 65, Chloe Cloman, Nika King
சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் , ஸ்காட் பெக், & பிரையன் வுட்ஸ் திரைக்கதை, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் பிரம்மண்டம
சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் , ஸ்காட் பெக், & பிரையன் வுட்ஸ் திரைக்கதை, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் பிரம்மண்டமாக வெளியாகியிருக்கும் திரைப்படம் 65. ஆடம் டிரைவஸ், அரியானா கிரீன்பிளாட், க்ளோ க்ளோமன், நிகா கிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள வாழ்க்கைப் போராட்டக் கதை.
இத்திரைப்படத்தை கதையும் திரைக்கதையையும் எழுதி, இதர சிலருடன் சேர்ந்து தயாரித்துள்ள இந்த இரட்டை இயக்குனர்கள், 2018 இல் வெளியாகி ஹிட்டான ’ஏ கொயட் பிளேஸ்’ என்கிற திகில் படத்தின் கதாசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றும் எதிர்பாரா வண்ணம் , மில்ஸ் (ஆடம் டிரைவர் ) ஓட்டி வந்த விமானம் ஆபாயமும், ஆபத்தும் நிறைந்த ஓர் இடத்தில் வந்திறங்குகிறது. எனினும் அவ்விடம் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூமி என்பதும் தெரியவர நாம் வாழும் பூமிதான் ஆனால் காலம் தள்ளியோ, அல்லது தாண்டியோ அதே இடத்திற்கு வந்தால் என்னென்ன ஆபத்துகள் இருக்கும் என கற்பனையாக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட படமாக இப்படம் விஷுவல் விருந்தாக நம்மை சீட்டின் நுனிக்கு இழுத்து வருகிறது.
மில்ஸை தவிர மிஞ்சியிருக்கும் இன்னொரு உயிர் கோவா (அரியானா கிரீன்பிளாட்). எதிர்கொள்ள உள்ள அபாயத்தின் ஆழத்தை உணராத இவ்விருவரும் ஆபத்துகளைக் கடந்து உயிர் தப்ப வேண்டும். என்ன ஆனார்கள் என்பது மீதிக் கதை. டைனோசர்கள் உட்பட இதர கொடிய விலங்கினங்களும் உலா வரும் அப்பகுதியில், தங்களை காத்துக்கொள்ள அவர்கள் இருவரும் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் பின்பாதி.
சல்வடோர் டோட்டினோ ஒளிப்பதிவும், லைட்டிங்கும் படத்தின் விஷுவல் விருந்துக்கு மாஸ் பலம்.
டேனி எல்ஃப்மேன்/கிரிஸ் பெக்கான் இசையில் ரன்னிங் , சேஸிங் காட்சிகள், திகில் அனுபவங்கள் என பின்னணி இன்னொரு பாத்திரமாக பயணிக்கிறது. உடன் பயணித்த அத்தனை மனிதர்களும் இறந்துவிட மைல்ஸ் தன் உயிரையும் துச்சமாக மதித்து உடன் இருக்கும் குழந்தையின் உயிரை பல இடங்களில் காப்பாற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய காட்டாயம், என ஆடம் நடிப்பில் அருமை.
உடன் பயணிக்கும் சிறுமி அரியானா பல இடங்களில் கியூட் தருணங்களை பதிவு செய்கிறார்.
இருப்பினும் இந்த கிரகத்தில் தொலைந்துச் செல்வது. வேற்றுக் கிரகத்தில் காணாம்ல் போவதே நாம் பார்த்துவிட்ட நிலையில் நாம் வாழும் பூமியிலேயே தொலைந்து போவது என்பது புதிது எனினும் என்னவோ இடிக்கிதே என பல இடங்களில் சினிமா கிளீஷேக்கள் கடக்கின்றன. மொத்தத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம், 3டி கண்ணாடி, விஷுவல், குழந்தைகளுடன் ஒரு அவுட்டிங் என திட்டமிட்டால் ‘65’ படம் நிச்சயம் ஏமாற்றாது.