சென்னை: அருண் விஷூவல்ஸ் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ், ஆர்.அருண் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்துள்ள படம், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’. இதை ‘உளவுத்துறை’ படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய ஜி.ராஜசேகர் எழுதி இயக்கியுள்ளார். தமிழ் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பெண் ஒளிப்பதிவாளர் சி.விஜய ஒளிப்பதிவு செய்துள்ளார். அருணகிரி இசை அமைக்க, கே.குமார் எடிட்டிங் செய்துள்ளார். சினேகன், பாஸ்கர் பாடல்கள் எழுதியுள்ளனர். ஜெயக்குமார் அரங்குகள் அமைத்துள்ளார்.
தெலுங்கில் நடித்து வருபவரும், தமிழில் ‘தங்கமகன்’, ‘டெவில்’, ‘கடாவர்’ ஆகிய படங்களில் நடித்தவருமான த்ரிகுண் ஹீரோவாக நடித்துள்ளார். ஜீத்தா கோஷ், இனியா, ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா, ரவிமரியா, தம்பி ராமய்யா, சத்யன் நடித்துள்ளனர். படம் குறித்து இனியா கூறுகையில், பெண் ஒளிப்பதிவாளருடன் பணியாற்றியது மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தது. அதனால்தான் ஹீரோவுடன் முத்தக்காட்சி உள்பட நெருக்கமான பல காட்சிகளில் நெருடல் இல்லாமல் நடிக்க முடிந்தது’ என்றார்.