ஐதராபாத்: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான மக்கள் தண்ணீரில் தவித்து வருகின்றனர். குறிப்பாக விஜயநகரம் ஏரி போல் காட்சி அளிக்கிறது. கனமழை காரணமாக சுமார் 6,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு தலா ₹50 லட்சம் என்று, மொத்தம் ₹1 கோடி நிவாரண நிதியை ஜூனியர் என்டிஆர் வழங்கி உள்ளார். அதுபோல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலங்கானாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ₹1 கோடி வழங்குவதாக, பாலகிருஷ்ணா தெரிவித்து உள்ளார்.