சென்னை: சிம்பு, ஹன்சிகா நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான படம் ‘மஹா’. இந்த படத்தை மதியழகன் தயாரித்தார். படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் வினியோக உரிமையை தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் என்பவருக்கு ரூ.6 கோடிக்கு வழங்கினார். இந்நிலையில் திடீரென மேலும் 6 பேருக்கு தமிழ்நாடு உரிமையை தனித்தனியே (மாவட்டங்கள் வாரியாக) பெரும் தொகைக்கு மதியழகன் வழங்கியுள்ளார்.
இது பற்றி முத்து சம்பந்தம் கேட்டபோது, உங்கள் 6 கோடி ரூபாயை ரிலீசுக்கு முன்பே படத்துக்கான லாபத்தொகையுடன் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என மதியழகன் கூறினாராம். ஆனால் இதுவரை அவர் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதையடுத்து முத்து சம்பந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி மதியழகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.