மும்பை: இந்தி டி.வி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர், இந்தி நடிகை ஷெஃபாலி ஜரிவாலா. நேற்று அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது கணவரும், இந்தி நடிகருமான பராக் தியாகி, மும்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஷெஃபாலி ஜரிவாலாவை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து மும்பை கூப்பர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
அந்தேரியில் இருக்கும் ஷெஃபாலி ஜரிவாலாவின் வீட்டுக்கு சென்ற மும்பை போலீசார், இது ஒரு சந்தேக மரணம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2002ல் ‘காந்தா லஹா’ என்ற இசை ஆல்பத்தின் மூலம் கவனத்தை ஈர்த்திருந்த ஷெஃபாலி ஜரிவாலா, தொடர்ந்து ‘முஜ்சே ஷாதி கரோகி’ என்ற இந்தி படத்தில் சல்மான்கானுடன் நடித்தார். 2019ல் ‘பேபி கம் நா’ என்ற வெப்தொடரில் நடித்தார். ஏராளமான நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்நிலையில், 42 வயதான அவர் திடீரென்று மரணம் அடைந்தது பாலிவுட்டில் பலத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.