பிரேசிலியா: கொழுப்பை நீக்கும் அறுவை சிகிச்சையின்போது பிரேசில் நடிகை லுவானா ஆண்ட்ரேட் என்பவர் மாரடப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கால்பந்து வீரர் நெய்மர் இரங்கல் தெரிவித்துள்ளார்.பிரேசில் நாட்டின் பிரபல நடிகை லுவானா ஆண்ட்ரேட் (29), ‘லிபோசெக்ஷன்’ என்ற கொழுப்பை நீக்கும் அறுவை சிகிச்சையை அடிக்கடி செய்து கொள்வார். இந்த அறுவை சிகிச்சையின் போது, உடலின் எந்தப் பகுதியிலிருந்தும் கொழுப்பை அகற்றலாம். இவ்வாறாக அவருக்கு நேற்று முன்தினம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சாவ் பாலோவில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அதனால் அவரை அவசர பிரிவில் வைத்து உயர் தொழில்நுட்ப முறையில் சிகிச்சை கொடுத்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் லுவானா ஆண்ட்ரேட் இறந்தார். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஒப்பனை அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது லுவானாவுக்கு 4 முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை’ என்று கூறினர். லுவானா ஆண்ட்ரேட்டின் மறைவுக்கு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் உள்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.